'வெடி போட வேற இடமே கிடைக்கலையா'.. அர்ச்சுனன் தபசு சிலை மீது பட்டாசு வெடித்த நபர்கள்.. பரபரப்பு
செங்கல்பட்டு: பாரம்பரிய நினைவுச்சின்னமான மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சிலையில் சிலர் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் அருகே மாமல்லபுரம் உள்ளது. இங்கு பல்லவர் கால்த்தில் உள்ள சிற்பங்கள் உள்ளன.
7 மற்றும் 8 ஆம் நுற்றாண்டுகளில் பல்லவ வம்ச அரசர்களால் இந்த சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. அர்ச்சுனன்தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, புலிக்குகை உள்ளிட்ட பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் இங்கு அமைந்துள்ளன.

பாரம்பரிய நினைவு சின்னம்
ஐக்கிய நாடுகள் அவையின் கலாசார பிரிவும் இதை பாரம்பரிய நினைவு சின்னமாக அங்கீகரித்துள்ளது. இந்த சிற்பங்களை காண்பதற்காக தமிழகம் மற்றும் வெளி மாநில சுற்றுலாப்பயணிகள் மட்டும் இன்றி வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் விடுமுறை தினங்களில் இங்கு சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது தீபாவளி பண்டிகை தொடங்கியுள்ளதால் இங்கு கூட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் கூட தமிழகம் வந்தால் மாமல்லபுரம் செல்வதைக் காண முடியும்.

காதல் சின்னங்களை வரைவது
சீன அதிபர் ஜி ஜின்பிங் கூட பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் வைத்து சந்தித்துப் பேசியதோடு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்டவைகளை வியந்து பார்த்தார். சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது. இந்த சுற்றுலாதலங்களை பார்வையிட வரும் காதலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நினைவுச்சின்னங்களில் தங்கள் பெயர்களை எழுதுவது காதல் சின்னங்களை வரைவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

மது அருந்துவது
இன்னும் சொல்லப்போனால் ஒரு படி மேலே சென்று நினைவுச்சின்னங்கள் மீது அமர்ந்து மது அருந்துவது என எல்லை மீறும் சம்பவங்களும் நடைபெற்றன. இது பெண் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்டவர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையிலும் இருந்தது. இதனால், இத்தகைய அத்துமீறல்களை தடுக்கும் விதமாக தொல்லியல் துறை சார்பில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டது.

பட்டாசு வெடித்தனர்
இதனால், இத்தகைய சம்பவங்கள் அங்கு குறைந்த நிலையில், தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அர்ச்சுனன் தபசு பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். சரவெடி பட்டாசுகளை வெடித்ததில் சில பட்டாசுகள் அர்ச்சுனன் தபசு யானை சிலை மீதும் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அர்ச்சுனன் தபசு பகுதியில் கருமை நிறம் படிந்தது. காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டதே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் என்றும் புராதான சின்னங்களை பாதுகாப்பதில் தொல்லியல் துறை அலட்சியம் காட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாதுகாப்பு பணி அதிகரிப்பு
இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறும் போது, ''புராதான சின்னங்கள் அருகே பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. ஆனால் தடையை மீறி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பட்டாசு வெடித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இத்தகைய சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்கப்படும். இதற்காக கூடுதல் பாதுகாப்பு அங்கு போடப்படும்'' என்றனர். தீபாவளி பண்டிகை காரணமாக மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications