கோமியத்தில் டோஸ்.. எதிரிகளுடனே போஸ்! டிகே சிவகுமார் அருகே யாரு தெரியுதா? குழப்பும் கர்நாடக டிராமா
பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்று இருக்கும் நிலையில், தேர்தலின்போதும் அதற்கு முன்பும் பரம எதிரிகள் போல் இருந்த பாஜகவினருடன் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தற்போது நெருக்கமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று, மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்து இருக்கிறது.

பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு கடந்த சனிக்கிழமை சித்தராமையா கர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்றார். இந்த தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் சிலர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
துணை முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே டிகே சிவகுமார் பலரை சந்தித்து வருகிறார். குறிப்பாக கட்சி பாகுபாடு இன்றி காங்கிரஸ், பாஜக தலைவர்களை அவர் சந்திக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தனது உறவினரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், தற்போது பாஜக மூத்த நிர்வாகியுமான எஸ்.எம்.கிருஷ்ணாவை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார் டிகே சிவகுமார். அத்துடன் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார்.
இந்த நிலையில் கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை, பாஜக முன்னாள் அமைச்சர் அசோக் ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார் டிகே சிவகுமார். பசவராஜ் பொம்மையை கட்டி அணைத்தபடியும், அசோக் தோளில் கைபோட்டுக்கொண்டு சிரித்தபடியும் டிகே சிவகுமார் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக சட்டசபைத் தேர்தலின்போதும், பசராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியின்போதும் இவர்கள் பரம எதிரிகளைபோல் காட்சி தந்தனர். குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் மஜத - காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பின்போது டிகே சிவகுமாரின் செயல்பாடுகள் இதனை உணர்த்தும் வகையில் இருந்தன. சிவகுமார் மீதான மத்திய புலனாய்வு நிறுவனங்களின் நடவடிக்கைகளும் இதையே காட்டின.
கடந்த ஜனவரி மாதம் பேசிய டிகே சிவகுமார், "பாஜக கர்நாடகாவில் தங்கள் கூடாரத்தை விரைவில் காலி செய்வார்கள். ஊழல் ஆட்சிசெய்து கர்நாடக சட்டப்பேரவையை பாஜகவினர் மாசுபடுத்தி உள்ளனர். நாங்கள் கோமியம் கொண்டு அதை துய்மைப்படுத்துவோம்." என்றார். இந்த நிலையில் சொன்னபடியே இன்று காலை கோமியம் கொண்டு கர்நாடகாவின் சட்டப்பேரவை வளாகத்தை காங்கிரஸ் கட்சியினர் தூய்மைப்படுத்தினர்.
இதன் மூலம் ஆட்சிக்கு வந்த பிறகும் பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர் அரசியலை காங்கிரஸ் கையில் எடுத்து இருப்பதாக தொண்டர்கள் கருதிய நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே பசவராஜ் பொம்மை, அசோக், டிகே சிவகுமாரின் சந்திப்பு இரு கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்து உள்ளது. இதில் குறிப்பாக முன்னாள் அமைச்சர் அசோக் உடனான சந்திப்பு சர்பிரைஸ் பேக்கேஜாக அமைந்துள்ளது.

அதற்கு காரணம் டிகே சிவகுமாரை கனகபுரா தொகுதியில் வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, அவர் சார்ந்த வொக்காலிகர் சமுதாயத்தை சேர்ந்த அசோக்கை அவருக்கு நிறுத்தியது பாஜக. ஆனால், அதில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றார் டிகே சிவகுமார். அசோக் டெபாசிட் இழந்தார். அதே நேரம் அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பத்மனாபநகர் தொகுதியில் அசோக் வென்றார்.
இப்படி தன்னை வீழ்த்த வேண்டும் என 2 தொகுதிகளில் போட்டியிட்டவருடனே டிகே சிவகுமார் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை ஒரு பக்கம் நாகரீக அரசியல் என்று கூறினாலும் மறுபக்கம் எல்லாம் டிராமா என்ற விமர்சனமும் எழுகிறது. கர்நாடகா மாநிலத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் அரசியலுக்கு வெளியில் நல்ல உறவோடு இருப்பது வழக்கம் என்றாலும், கடந்த 5 ஆண்டுகளில் உக்கிரமான மோதல்களை சந்தித்த பிறகும் இத்தகைய நட்பு தொடர்வது வினோதமானதாக தெரிகிறது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications