தேமுதிகவுக்கு வெறும் 4 பர்சன்ட் ஓட்டுதான் - பாஜகவை விட பாதி: கருத்துக் கணிப்பு
டெல்லி: என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தேமுதிகவுக்கு எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது பாஜகவை விட இக்கட்சிக்கு குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகுமாம்.
காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் தலா 8 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுகவுக்கு 45 சதவீதம்
என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுளளது. இக்கட்சி 27 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு 28 சதவீதம்
திமுகவுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங். - பாஜக சமம்
காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் சரிசமமாக ஆளுக்கு 8 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

தேமுதிகவுக்கு 4 தான்
பெரும் பில்டப்பாக பாஜகவிடம் கறாராக பேசி வரும் தேமுதிகவுக்கோ 4 சதவீத ஆதரவே கிடைக்குமாம்.

மொத்தமாக மற்றவர்களுக்கு 7 சதவீதம்
பாமக, மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு 7 சதவீத வாக்குகள் கிடைக்குமாம்.












Click it and Unblock the Notifications