திமுக - 111, அதிமுக - 107 தொகுதிகள் வரை கைப்பற்றும்: நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு !
டெல்லி: அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு வெளியான நிலையில், தமிழகத்தில் திமுக 107 இடங்கள் முதல் 111 இடங்கள் வரை கைப்பற்றும் என்று நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் மே 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.

அதில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அதிமுக 130 இடங்கள் வரை கைப்பற்றும் எனவும் கூறப்பட்டிருந்தது. திமுக 70 தொகுதிகளையும் மற்ற கட்சிகள் 34 இடங்களையும் வெல்லும் என கூறியிருந்தது.
மேலும் அ.தி.மு.க.,வுக்கு 39 சதவீத வாக்குகளும் தி.மு.க., கூட்டணிக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறியது கருத்துக்கணிப்பு.
இந்நிலையில், நியூஸ் நேஷன் என்கிற மற்றொரு செய்தி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 10000 பேரிடம் நடத்திய ஆய்வு முடிவின் அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு நடைபெற்றதாக நியூஸ் நேஷன் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவின்படி, திமுக 107 இடங்கள் முதல் 111 இடங்கள் வரை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 103 இடங்களிலிருந்து 107 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மக்கள் நலக் கூட்டணி 14 இடங்களிலிருந்து 18 இடங்கள் வரை பெறும் என்றும், மேலும் பாஜக ஒரு தொகுதி கூட கைப்பற்ற வாய்ப்பில்லை என்றும் நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications