என் வாழ்க்கையைப் பள்ளியில் பாடமாக வைக்காதீர்கள்.. மோடி
டெல்லி: யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றையும் பாடமாக வைப்பதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. எனது வாழ்க்கை வரலாற்றையும் பாட நூலில் சேர்ப்பதை நான் விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைப் பாட நூல்களில் பாடமாக வைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில அரசு மோடியின் வாழ்க்கையை பாடமாக வைக்க முடிவு செய்துள்ளது குறித்து இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
|
என்னைப் பாடமாக வைக்காதீர்கள்
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், சில மாநில அரசுகள் எனது வாழ்க்கைப் போராட்டத்தைப் பாடமாக வைக்க விரும்புவதாக அறிகிறேன். அதை நான் விரும்பவில்லை.
|
தனி மனித வாழ்க்கை பாடமாகக் கூடாது
தனிப்பட்ட மனிதர்களின், குறிப்பாக உயிருடன் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பாட நூல்களில் வைப்பதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் பள்ளிப் பிள்ளைகளுக்கு அதைப் பாடமாக போதிப்பது பொருத்தமாகவும் இருக்காது.
|
இந்தியாவில் எத்தனையோ மாவீரர்கள் உள்ளனர்
இந்தியாவில் எத்தனையோ மாவீரர்கள் உள்ளனர். மகான்கள் இருந்துள்ளனர். அவர்கள் தான் இன்றைய இந்தியாவின் விதைகள். அவர்களைப் பற்றித்தான் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொண்டு அவர்களைப் போல நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.

குஜராத் அரசு
குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்தர்சின்ஹ் சுடாஸ்மா நேற்று கூறுகையில், மோடியின் வாழ்க்கை வரலாறு அடுத்த ஆண்டு பள்ளிப் பாடமாக வைக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.பியும் விருப்பம்
அதேபோல மத்தியப் பிரதேச அரசும் மோடி வாழ்க்கைப் பாடம் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானும்
அதேபோல ராஜஸ்தானும் மோடி வாழ்க்கையை பாடநூலில் சேர்க்கத் திட்டமிட்டு வருகிறது. அதேபோல வாஜ்பாய் வாழ்க்கையையும் பாடமாக்க அது திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications