தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது - குமாரசாமி பேட்டி
பெங்களூர்: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
காவிரியில் தமிழகத்துக்கு இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை கர்நாடக அமைச்சரவை கூட்டம் அவசரமாக கூடியது. இதனைத் தொடர்ந்து மாலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாராசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என எங்களின் முழு எதிர்ப்பையும் தெரிவித்தேன்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு அநியாயமானது என்றும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டாம் என வலியுறுத்தினேன்.மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் தருவதா இல்லையா என்பது பற்றி சட்டமன்றத்தை கூட்டி இறுதி முடிவு செய்வது என கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். பாஜக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications