Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இத்தனை கோடியா? அம்பானி பரம்பரையாச்சே சும்மாவா? ஆனந்த் அம்பானி கட்டியிருக்கும் வாட்ச் விலை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை என்ன தெரியுமா?

இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவருடைய மனைவி நீடா அம்பானி பரதநாட்டிய கலைஞர். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். முகேஷ் அம்பானியின் வளர்ச்சியில் நீடாவுக்கும் பங்குண்டு.

முகேஷ் அம்பானியை விட நீடா அம்பானி பற்றிய செய்திகள்தான் அதிகம் வரும். அவரை விட்டால் அவருடைய மகன்களுடைய செய்தி வரும். முகேஷ்- நீடா தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, இஷா அம்பானி ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

Do you know Anant Ambanis watch rate when he wore in cultural centre function?

இந்த நிலையில் ஆகாஷுக்கும் இஷாவுக்கும் திருமணமாகிவிட்டது. இதில் இஷாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஆகாஷுக்கு ஒரு குழந்தை உள்ளது. அம்பானி வீட்டில் நடக்கும் விஷயம் என்றாலே அதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். நீடா அம்பானி வீட்டு விசேஷங்களுக்கு அணியும் புடவை, நகை, ஹேண்ட் பேக் உள்ளிட்டவைகளின் விலை குறித்து தெரிந்து கொள்ள விரும்புவர்.

அது போல் நீடா அம்பானி 60 வயதிலும் இளமையாக இருக்கக் காரணம், அவருடைய உணவு பழக்கம்... இப்படி பல விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் ஆனந்த் அம்பானி குறித்து அண்மைக்காலமாக செய்திகள் வலம் வந்தன. அவர் ராதிகா மெர்சனட்டுடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் தற்போது அவர்களுக்கு பெரியவர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஆனந்த் ஆகாஷ் முன்பு 100 கிலோவுக்கு மேல் எடை கொண்டிருந்தார். அதன்பின்னர் என்ன செய்தார் என தெரியவில்லை. தடாலடியாக உடல் எடை குறைந்து காணப்பட்டார். இவருக்கு அனைவரும் பாராட்டுகளை கூறி வந்தனர். உடல் எடை குறைக்க வேண்டும் என்கிற வெறிதான் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த ரிசல்ட்டில் நன்கு தெரிகிறது.

அண்மையில் ராதிகா மெர்சன்டுன் நடந்த நிச்சயதார்த்ததில் மீண்டும் உடல் எடை கூடியுள்ளார் ஆனந்த் அம்பானி. இதற்கு அவர் குறைந்த உடலை சரியாக மெயின்டெய்ன் செய்யாமல் விட்டதே என்கிறார்கள். இவர் தனது தந்தை முகேஷுடன் இணைந்து வர்த்தகம் செய்துவருகிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தை மேம்படுத்தி வருகிறார்.

Do you know Anant Ambanis watch rate when he wore in cultural centre function?

இந்த நிலையில் அண்மையில் நீடா அம்பானி பெயரில் ஒரு கலாச்சாரம் மையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பல விஐபிக்கள் வந்தனர். அந்த நிகழ்வில் திருமண ஆனந்த் அம்பானி தனது மனைவி ராதிகாவுடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் குறித்து விவாதங்கள் எழுந்தன.

அந்த கடிகாரம் patek phillipe நிறுவனத்தின் Grandmaster Chime watch என அழைக்கப்படுகிறது. இந்த கடிகாரத்தில் சாதாரண கடிகாரத்தை விட 20 சிக்கலான அம்சங்கள் இருக்கின்றன. இந்த கடிகாரத்தை கண்டுபிடிக்க 11 ஆண்டுகள், அதாவது 1 லட்சம் மணி நேரம் செலவிட்டுள்ளார்கள். இரு தனித்தனி முட்கள் இருக்கும்.

இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது போல் ராதிகா மெர்சன்டின் ஹேண்ட் பேக்கின் விலை ரூ 2 கோடியாம். இந்த ஹேண்ட் பேக்கின் நிறுவனம் ஹெர்மீஸ் கெல்லி தயாரித்துள்ளது. ராதிகா கருப்பு நிற சேலையில் அழகாக இருந்தார். ராதிகா மெர்சன்ட்டும் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+