கண்ணை திறந்த ராமர்.. இன்று முதல் அயோத்தி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி.. இதுதான் டைமிங் + டிரஸ் கோட்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், பொதுமக்களின் தரிசனத்துக்காக இன்று திறக்கப்படுகிறது.
நேற்றைய தினம், அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் திறக்கப்பட்டது.. 3 அடுக்குகளை கொண்ட இந்த ராமர் கோவில், முதல் தளத்தின் பணிகள் நடந்து முடிந்த நிலையில், திறப்பு விழா நடந்துள்ளது.. கடந்த 16ம் தேதி இதற்கான கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் தொடங்கி நடந்து வந்த நிலையில் நேற்று, பிரதிஷ்டை சடங்குகள் நடத்தப்பட்டன.
இந்த சடங்குகள் அனைத்தையுமே பிரதமர் மோடி முன்னின்று செய்தார்.. 5 வயது குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அர்ச்சகர் உதவியுடன் பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார். ராமர் சிலை பிரதிஷ்டைக்கான மொத்தம் 84 வினாடி நேரம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராமர் கண்கள்: அதன்படியே, 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது. பால ராமர் சிலையின் கண்களும் திறக்கப்பட்டன.
நேற்றையதினம் திறப்பு விழா என்பதால், அழைப்பிதழ் வழங்கப்பட்ட பிரபலங்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர். மற்றபடி, பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே, இன்று முதல், பொதுமக்கள் ராமர் கோவில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
எப்படியும், ஒரு நாளைக்கு 3 லட்சம் போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதாவது, காலை 7 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 7 மணிவரையும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
வெப்சைட்: அதுமட்டுமல்லாமல், காலை 6.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நடத்தப்படும் சிறப்பு பூஜையை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவை https://srjbtkshetra.org/ என்ற வெப்சைட்டில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த வசதி தொடங்கப்படவில்லை. இதே வெப்சைட்டில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கலாம்.
கோயில் திறக்கப்பட்ட சில நாள்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்க நேர்ந்தால், தரிசன நேரத்தை அதிகரிக்கவும் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு கோயில் திறக்கப்படுவதால், இன்றைய தினம், நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய திரண்டு வர துவங்கி உள்ளனர்.
டிரஸ் கோட்: அதேசமயம், ராமர் கோவிலுக்கு செல்வோர் அணிந்து செல்ல வேண்டிய ஆடைகள் தொடர்பான டிரஸ்கோட் பற்றின வெளியாகி உள்ளது. அந்தவகையில், ஆண், பெண் என இரு தரப்பினருமே நமது கலாச்சார பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும்.
ஆண்கள் என்றால் வேஷ்டி, சட்டை, குர்தா-பைஜாமா, சுடிதார், பேண்ட்டுடன் இணைந்த ஷெர்வானி (Sherwani) அல்லது அச்கான் (Achkan), முண்டு என அழைக்கப்படும் வேஷ்டி, பருத்தி ஆடைகளை அணியலாம். ஆனால், ஆடைகள் தளர்வாக இருக்க வேண்டும். மாறாக ஷார்ட்ஸ், டீசர்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியக்கூடாது.
பெண்கள் ஆடை: பெண்கள் என்றால் புடவை அணியலாம். பருத்தி மற்றும், பட்டு சேலைகளும் லைட் வண்ணத்தில் அணியலாம். அல்லது சல்வார் கமீஸ், லெஹெங்கா சோளி, பலாஸ்ஸோ சூட் அணியலாம். ப்ளவுசுடன் கூடி லாங்க் ஸ்கீட்டை (Long Skirt with Blouse) துப்பட்டாவுடன் அணியலாம். தோள்பட்டை மற்றும் முழங்கால் தெரியும் வகையிலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications