பெட்ரோல் பங்க்கில் நுழைந்த பாஜக பிரபலம்.. கார் கிட்ட போன ஊழியர்.. அடுத்து நடந்த விசித்திரம்.. பார்ரா
கான்பூர்: பாஜக எம்எல்ஏ ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள பாஜகவினர், இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வைரலாக்கியும் வருகிறார்கள்.. என்ன நடந்தது உத்தரபிரதேசத்தில்?
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.. இங்குள்ள சர்க்காரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரிஜ்பூஷன் ராஜ்புத்.. இவர் நேற்று தன்னுடைய காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்..

அப்போது மஹோபா சாலையில் சென்றபோது, அங்கிருந்த ஒரு பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தார்.. பெட்ரோல் பங்கில் தன்னுடைய காரை நிறுத்தி, அங்கிருந்த ஊழியரிடம் தன்னுடைய பெட்ரோலை நிரப்ப சொன்னார்.. உடனே அங்கிருந்த ஊழியர் அகிலேந்திர கரே என்பவரும், எம்எல்ஏவின் காருக்கு பெட்ரோல் நிரப்பினார்..
பிறகு, காருக்குள் உட்கார்ந்திருந்த எம்எல்விடம் சென்ற ஊழியர், எனக்கு கல்யாணத்துக்கு ஒரு பெண்ணை பார்த்து தர முடியுமா? என்று கோரிக்கை விடுத்தார்.. இந்த கோரிக்கையை கண்டு திடுக்கிட்ட பாஜக எம்எல்ஏ, அந்த ஊழியரிடம் இதுகுறித்து விசாரித்தார்.. இது தொடர்பான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெட்ரோல் பங்க் ஊழியர்: "இந்த சர்க்காரியில் தொகுதியில்தான் நான் வசித்து வருகிறேன்.. என் பெயர் அகிலேந்திர கரே.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. எனக்கு பெண் பார்க்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்"
பாஜக எம்எல்ஏ: "உனக்கு இப்போ என்ன வயசாகுது?"
பெட்ரோல் பங்க் ஊழியர்: "44 வயசு சார்"
பாஜக எம்எல்ஏ: "உனக்கு ஒரு பொண்ணு தேடுவதற்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்?"
பெட்ரோல் பங்க் ஊழியர்: ''உங்களுக்கு நான் ஓட்டு போட்டேன்"
महोबा - पेट्रोल पंप कर्मी ने BJP विधायक से सिफारिश की
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) October 16, 2024
➡MLA बृजभूषण राजपूत से शादी कराने की सिफारिश की
➡बृजभूषण राजपूत ने पेट्रोल कर्मी को दिया आश्वासन
➡हमने आपको वोट दिया था हमारी शादी करवाओ- रिंकू
➡चरखारी के मौर्या फिलिंग स्टेशन में कर्मचारी है रिंकू खरे#Mahoba | @BJP4UP… pic.twitter.com/vdtR0e7Csh
பாஜக எம்எல்ஏ: "(சிரித்துக்கொண்டே) இதுக்கு முன்பு எங்காவது சென்று பெண் கேட்டாயா? சரி, உனக்காக வேண்டிக் கொள்கிறேன்.. உனக்காக பெண்ணையும் தேடுகிறேன்.. அதுவும் நீ எனக்கு வாக்களித்ததால் இதை செய்கிறேன்.. பெண் வீட்டார் கேட்டால், உன்னுடைய வருமானம் எவ்வளவு என்று சொல்லட்டும்?
பெட்ரோல் பங்க் ஊழியர்: "6 ஆயிரம் ரூபாய்.. 13 பிகாஸ் olarak நிலம் இருக்கு.. இந்த நிலத்தின் மதிப்பு கோடிக்கணக்கு பெறும்...
பாஜக எம்எல்ஏ: "சரி, நான் நிச்சயம் திருமணத்துக்கு உதவுகிறேன்" என்று சொல்லி, அங்கிருந்து கிளம்பி சென்றார் பாஜக எம்எல்ஏ.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications