சத்தீஸ்கரில் துணை முதல்வர் தியோ, பாஜக எம்பி விஜய் பாகல் தோல்வி! மத்திய அமைச்சர் ரேணுகா வெற்றி!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்து முடிந்த தேர்தலில் நட்சத்திர போட்டியாளர்களில் யாரெல்லாம் வென்றுள்ளார்கள் என்பதை பார்ப்போம்.
மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட இந்த சட்டசபைக்கு 45 அல்லது 46 இடங்களில் வென்றால் அக்கட்சியே ஆட்சி அமைக்க உரிமை கோரும். இந்த மாநிலமானது மத்திய பிரதேசத்திலிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு உருவானது. இதையடுத்து அந்த ஆண்டு முதலில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சி முதலில் ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் நிர்வாகியும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவருமான அஜித் ஜோகி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் 2003 ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். இதையடுத்து 2003 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தது.
பாஜகவை சேர்ந்த ரமான் சிங் முதல்வரானார். இவர் 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வென்று 3 முறை அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார். இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வென்றது. பூபேஷ் பாகல் முதல்வரானார்.
கடந்த முறை காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 68 இடங்களில் வென்று வாக்குகள் 61,36,429 (43.0%) வாக்குகளை பெற்றது. பாஜக 15 இடங்கள் இடங்களில் வென்று 47,01,530 (33.0%) வாக்குகளை பெற்றது. ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜேசிசி) 5 இடங்களில் வென்று 10,81,760 (7.6%) வாக்குகளையும் , பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களில் வென்று 5,51,687 (3.9%) வாக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த முறை தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகனை பலமாக தயார் செய்துள்ளது. இதில் விவசாயிகளின் தோழன் என சொல்லப்படும் பூபேஷ் பாகலும் மக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். அவ்வாறு யாரெல்லாம் காத்திருக்கிறார்கள், முக்கிய வேட்பாளர்கள் என்பதை பார்ப்போம்.
பதான் தொகுதியில் பூபேஷ் பாகேல் (காங்கிரஸ்), ராஜ்நந்த்கான் தொகுதியில் ரமண் சிங் (பாஜக), படான் தொகுதியில் விஜய் பாகேல் (பாஜக), பதல்கான் தொகுதியில் கோமதி சாய் (பாஜக), பாரத்பூர்-சோன்ஹாட் தொகுதியில் ரேணுகா சிங் சருதா (பாஜக), டிஎஸ் சிங் தியோ (காங்கிரஸ்) அம்பிகாபூர் தொகுதியிலும், லோர்மி தொகுதியில் அருண் சாவோ (பாஜக), ராய்ப்பூர் சிட்டி தெற்கு தொகுதியில் பிரிஜ்மோகன் அகர்வால் (பாஜக), துர்க் கிராம் தொகுதியில் தாம்ரத்வாஜ் சாஹு (காங்கிரஸ்), சக்தி சரண் தாஸ் மஹந்த் (காங்கிரஸ்), சித்ரகோட் தொகுதியிலும் தீபக் பைஜ் (காங்கிரஸ்) உள்ளிட்டவர்கள் போட்டியிட்டுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications