42 ஆண்டாக மூடி கிடக்கும் ரயில் நிலையம்.. இறந்த சிறுமி வெள்ளை நிற சேலையில் டிராக்கில் உலா! பகீர்!
கொல்கத்தா: இந்தியாவில் ஒரு ரயில் நிலையம் 42 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?
மேற்கு வங்கத்தின் புருஸலியா மாவட்டத்தில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி பிரிவில் உள்ள கோட்ஷிலா- முரி பிரிவில் அமைந்துள்ளது பெகுன்கோடர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் பெயரைக் கேட்டவுடன் மக்கள் அச்சம் அடையும் நிலை உள்ளது.

இந்த ரயில் நிலையம் 42 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. 1960 களில் சந்தலின் ராணி லச்சன் குமாரியின் முயற்சியால் இந்த ரயில்நிலையம் கட்டப்பட்டது. இந்த ரயில் நிலையம் அமைந்தவுடன் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி 6 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
ஆம் 1967 ஆம் ஆண்டு இந்த ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் ரயில் டிராக்கில் ஒரு மந்திரவாதியை பார்த்ததாக கூறினார். அவர் கூறியது போலவே பெண் மந்திரவாதி வெள்ளை நிற சேலை அணிந்திருந்தார். இரவுநேரங்களில் ரயில் பாதைகளில் சுற்றி வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். இந்த வதந்தி பரவிய நிலையில் மேலும் பலர் இது போல் மந்திரவாதியை பார்த்ததாக கூறினர்.
இந்த ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட சிறுமி ஒருவர் மந்திரவாதி ஆகிவிட்டார் என மக்கள் கூறத் தொடங்கினர். இந்திய ரயில்வேயில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த சுபாஷிஷ் தத்தா ராய் இந்த ரயில் நிலையம் குறித்து கதையாக எழுதியிருந்தார். ரயில்வே நிர்வாகம் இந்த வதந்திகளை மறுத்தாலும் சில நாட்கள் கழித்து ஸ்டேஷன் மாஸ்டரும் அவருடைய குடும்பத்தினரும் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர்.
இதன் பிறகுதான் வதந்தி என கூறப்பட்ட சம்பவம் உண்மை என நம்ப வைத்தது. ஸ்டேஷன் மாஸ்டர் இறந்த பிறகு, இங்கு பணிக்கு வரவே ஊழியர்கள் மறுத்துவிட்டனர். ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த ரயில் நிலையத்தில் ஊழியர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் முயற்சித்தது. ஆனால் ஊழியர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் அந்த ரயில் நிலையத்தை மூடிவிட்டது.
இந்த ரயில் நிலையத்தை ரயில் கடக்கும் போது ஒரு வித அச்சம் பயணிகளுக்கு ஏற்படுகிறது. 1990களில் இந்த ரயில் நிலையத்தை மீண்டும் தொடங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ரயில்வே நிர்வாகமும் இதை பற்றி யோசிக்க ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து 42 ஆண்டுகளுக்கு பிறகு 2009ஆம் ஆண்டு ரயில்வே துறை அமைச்சராக மம்தா பானர்ஜி இருந்த போது பெகுன்கோடார் ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.
இது ரயில் நிறுத்துமிடமாக மாறியது. இன்றும் இங்கு எந்த ரயில்வே ஊழியரும் நியமிக்கப்படவில்லை. மாலை நேரத்தில் விலங்குகள் கூட இந்த ரயில் நிலையத்திற்கு வரவே வராது.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications