அடின்னா அடி அப்படி ஒரு தர்ம அடி.. நோயாளியை பாய்ந்து பாய்ந்து அடித்து வெளுத்த டாக்டர்!
ஜெய்ப்பூரில் நோயாளியை மருத்துவர் சரமாரியாக அடித்துள்ளார்
Recommended Video
ஜெய்ப்பூர்: சினிமாவில வருமே ஃபைட் சீன்.. அப்படியே இருக்கு பார்க்கறதுக்கு.. அடின்னா அடி.. அப்படி ஒரு அடி.. அடி வாங்கிறது ஒரு நோயாளி.. பாய்ந்து பாய்ந்து அடிக்கிறது ஒரு டாக்டர்!
அடி வாங்கிட்டு காயத்தோட ஆஸ்பத்திரிக்கு போவோம்.. ஆனா ஆஸ்பத்திரியிலேயே அடிவாங்கினா எங்க போறது? அப்படித்தான் ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது!
ஜெய்ப்பூரில் ஸவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில், ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இது போன ஞாயிற்றுக்கிழமை அதே ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் என சொல்லப்படுகிறது.

உள்நோயாளி
அது பெரிய ஹால் போல இருக்கிறது. நோயாளிகள் நிறைய பேர் படுக்கையில் படுத்துள்ளனர். அப்போது, இந்த ஆஸ்பத்திரியில் ஒருவர் உள்நோயாளியாக வந்து சேர்ந்துள்ளார். அவரும் படுக்கையில் படுத்து கொண்டிருக்கிறார்.

அடி, உதை
அப்போது ஒரு டாக்டர் வருகிறார். ஆபரேஷன் செய்யும்போது முகத்துக்கு அணியும் மாஸ்க் ஒன்றினை கட்டியுள்ளார். அதனால் அவர் முகம் சரியாக தெரியவில்லை. அங்கு படுக்கையில் படுத்திருந்த அந்நபரை சரமாரியாக அடித்து உதைக்கிறார்.

நோயாளி
வலி பொறுக்க முடியாத நோயாளி, டாக்டரை கையால் தள்ளி விடுகிறார். ஆனால் டாக்டர் பக்கத்தில் இருந்த கட்டில் மேலே பாய்ந்து ஏறி, திரும்பவும் அந்த நோயாளியை அடிக்கிறார். இதை அங்கிருந்த மற்ற நோயாளிகள், டாக்டர்கள், நர்ஸ்கள், நோயாளிகளை கவனித்து கொள்ள வந்திருந்த சொந்தக்காரர்கள் என எல்லாருமே பார்த்து ஷாக் ஆகி நின்றனர்.
|
விசாரணை
இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் போட்டுவிட்டார். இது இப்போது வைரலாகி வருகிறது. இது சம்பந்தமாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்க, அதற்கு ராஜஸ்தான் அரசும் சரி என்று சொல்லி உள்ளது. மேலும் இந்த வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அம்மாநில சுகாதாரத்துறையும் கேட்டுள்ளதாம்.

இது தப்பு
என்ன விளக்கம் தந்து என்ன.. அது ஆயிரம் காரணம் இருக்கட்டுமே.. ஒரு நோயாளியை எப்படி டாக்டர் அடிக்கலாம்? யாரையுமே அடிக்க யாருக்குமே உரிமை இல்லாதபோது, டாக்டருக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகும்? மருந்து, ஊசி போட்டுக்கவில்லை என்று நோயாளியின் நன்மைக்காகவே இது நடந்திருந்தாலும்கூட இது தப்புதான்.. ஒரு டாக்டருக்கு இவ்வளவு கோபம் இருக்க கூடாது! முதல்ல டாக்டருக்குதான் ட்ரீட்மென்ட் தேவைப்படுது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications