11 ஆண்டுகளாக தங்கையை பலாத்காரம் செய்த டாக்டர் கைது
குர்காவ்ன்: ஹரியானா மாநிலத்தில் தங்கையை 11 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் குர்காவ்ன் மாவட்டத்தில் உள்ள மானேசரில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 33 வயது மருத்துவருடன் பிறந்தவர்கள் 5 சகோதரிகள். அந்த மருத்துவர் தனது சகோதரிகளில் ஒருவரை 2005ம் ஆண்டு அந்த பெண் ப்ளஸ் 2 படித்த போதில் இருந்து 11 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதை வெளியே கூறினால் குடும்ப பெயர் கெட்டுவிடும் என்பதால் அப்பெண் தனக்கு நடந்த கொடுமை பற்றி யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் மருத்துவருடன் தங்கியிருக்கும் தாயை பார்க்க அப்பெண் நேற்று முன்தினம் மானேசர் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் தங்கையை மீண்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதையடுத்து இத்தனை ஆண்டுகளாக நடந்தவற்றை எல்லாம் பெற்றோர் மற்றும் சகோதரிகளிடம் அப்பெண் தெரிவித்தார். பின்னர் நேற்று மானேசர் காவல் நிலையத்திலும் தனது சகோதரர் மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மருத்துவரை கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications