மூளை அறுவை சிகிச்சையின்போதும்.. திரைப்படம் பார்த்த ஆந்திர பெண்.. ஏன் தெரியுமா?
காக்கிநாடா: ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு நடிகர் என்டிஆரின் அதுர்ஸ் திரைப்படத்தை பெண் நோயாளி ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்கையில், மருத்துவர்கள் அவருக்கு மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீக்கெண்டில் திரைப்படம், வீக் ஆஃப் என்றால் திரைப்படம், பண்டிகை நாளில் திரைப்படம். சாப்பிடும்போது திரைப்படம் என்று நம்மில் பலரும் சினிமா பிரியர்களாகத்தான் இருப்போம். ஒரு நல்ல திரைப்படம் பலதரப்பட்ட அனுபவங்களையும், பாடங்களையும் ரசிகர்களுக்கு கற்பித்துவிடும். அந்த வகையில், மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போது கூட பெண் ஒருவர் திரைப்படம் பார்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வாங்க அந்தப் பெண்மணியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் அனந்த லட்சுமி என்ற 55 வயதான பெண்மணி. இவருக்கு தொடர் தலைவலி, கை, கால்கள் மரத்துப் போதல் உள்ளிட்ட பிரச்னைகளால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அவர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, அனந்தலட்மியின் மூளையின் இடது பக்கத்தில் 3.3 செ.மீ. X 2.7 செ.மீ. என்ற அளவிற்கு ஒரு கட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தக் கட்டியை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், அவெக் கிராணியோடனோமி என்ற சிக்கலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு பண வசதி இல்லாததால் ஆந்திராவில் உள்ள காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் அனந்தலட்சுமி அனுமதிக்கப்பாட்டார்.
மூளையில் உள்ள இந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றும்போது நோயாளி விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் கட்டியை அகற்றும் போது நிபுணர்கள் அவரது நரம்பு மண்டல செயல்பாட்டை கண்காணிக்க முடியும். இதனால், நோயாளி விழிப்புடன் இருக்கும் வகையில் அனந்தலட்சுமிக்கு அதுர்ஸ் என்ற ஜூனியர் என்டிஆரின் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
அனந்தலட்சுமி திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கையில், மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினர். திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்ததால் அனந்தலட்சுமியால் தொடர்ந்து விழித்திருக்க முடிந்துள்ளது. இரண்டரை மணி நேர அளவிலான அறுவை சிகிச்சையின் முடிவில் அவரது மூளையில் இருந்த கட்டியை காக்கிநாடா அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
இந்த அறுவை சிகிச்சையின் வீடியோ சுதாகர் உடுமலை என்ற எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அனந்தலட்சுமி மீண்டு வர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நிபுணர்கள் ஆனந்த லட்சுமி விரைவில் குணமடைவார் என்றும், ஐந்து நாட்களில் வீடு திரும்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications