இஸ்லாமாபாத்தில் ஐ.நா.வுக்கான பாக். பிரதிநிதி வீட்டில்தான் தாவூத் பதுங்கல்?
டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி மாலீகா லோதி வீட்டில்தான் பதுங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாவூத் இப்ராகிம் தொடர்பான இந்தியாவின் ஆவணங்களில், மெயின் மர்காலா சாலை எஃப்-6/2, எண்: 7, இஸ்லாமாபாத் என்பதுதான் தாவூத் இப்ராகிமின் முகவரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முகவரியானது தாவூத் இப்ராகிமின் வீட்டு முகவரியா? அல்லது ஐ.நா. சபைக்கான பாகிஸ்தானின் நிரந்த பிரதிநிதி மலீகா லோதியின் வீட்டு முகவரியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் ஊடகங்களோ இது லோதியின் வீட்டு முகவரிதான் என்று உறுதியாக எழுதி வருகின்றன. மேலும் அந்த முகவரியில் உள்ள பாதுகாவலரிடம், தாவூத்தின் வீடு இதுதானா என்ற கேள்வி கேட்கப்பட்டதாகவும், அப்படி ஒரு பெயரையே தாம் இப்போதுதான் கேட்கிறேன், இது மலீகா லோதியின் வீடு; இந்த வீட்டை அவரது செயலாளர்தான் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளதாகவும் பாகிஸ்தானின் தி நேசன் ஏடு பதிவு செய்துள்ளது.
மலீகா லோதிதான் காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் எழுப்பியவர்; காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண ஐ.நா. மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசிவருகிறவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அதிகாரிகள், 1993ஆம் ஆண்டு முதலே தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்றே கூறி வருகிறது பாகிஸ்தான். எங்களுக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின்படியே அந்த முகவரியை நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம் என்கின்றனர். பாகிஸ்தானைப் பொறுத்தவரை சர்வதேச விசாரணை அமைப்புகளை முட்டாளாக்கிக் கொண்டு தாவூத்தை பாதுகாப்பதில் குறியாக இருக்கிறது.
தாவூத் பதுங்கியிருக்கும் இடம் பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு மிக நன்றாகவே தெரியும்... கராச்சி, இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தானுக்கு தாவூத் இடம்பெயர்ந்தார் என்று ஐ.எஸ்.ஐ.தான் தகவல்களை பரப்பியது என்கின்றனர் வெளியுறவுத் துறை அதிகாரிகள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications