"நெளிந்த" திமுக.. சங்கடத்தில் கதர்கள்.. கார்த்தி சிதம்பரம் இப்படி சொல்லிட்டாரே.. கவனிக்கும் கட்சிகள்
கார்த்தி சிதம்பரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்
ராய்ப்பூர்: "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றுள்ளோம். அதையும் கருத்தில்கொண்டு பார்க்க வேண்டும்" என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ள கருத்துக்கள் சொந்த கட்சியினரையே கவனிக்க வைத்து வருகிறது.
சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது... காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

கார்த்தி சிதம்பரம்
குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.

ஈவிஎம் மெஷின்கள்
காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் பேசினார்.. அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த தன்னுடைய கருத்தை வெளிப்படையாகவே கூறினார்.. குறிப்பாக, "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து... ஆனால், கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம்.,. அது பற்றியெல்லாம் என்னால் பேச முடியாது.. நான் ஆரம்பத்தில் இருந்தே இதைதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோமே.. அதையும் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்..

நோ மோசடி
வாக்குப்பதிவு இயந்திரமானது எப்போதுமே நெட்வொர்க் தொடர்புகள் எதுவும் இல்லாமல் தனித்து இயங்கக்கூடியது... அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது" என்று கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார். ஈவிஎம். இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து, காங்கிரஸ் கட்சியினர் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும்நிலையில், கார்த்தி சிதம்பரம், மின்னணு வாக்கு இயந்திரங்களை எந்த நெட்வொர்க் மூலமும் மோசடியாக இயக்க முடியாது என்று கூறியுள்ளதை, சொந்த கட்சியினரை உற்றுகவனிக்க வைத்துள்ளது..

சேம்சைடு கோல்
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "காங்கிரசின் கட்டமைப்பு பாஜகவுக்கு இணையாக இல்லை.. அதனால் கட்சியை சீரமைத்து மாற்றியமைக்க வேண்டும்.. சசிதரூர் கூறியதைப்போல் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.. ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவிற்கு அதிகம் செல்வாக்கு இருக்கிறது.. காங்கிரஸை விட அவர்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளது, இது யதார்த்தமான உண்மை" என்று கூறியிருந்தார்.. அதுமட்டுமல்ல, திமுகவின் திராவிட மாடல் என்றால் என்ன கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் ஒருமுறை கேட்டிருந்தனர்..

தர்மசங்கடம்
அதற்கு கார்த்திக் சிதம்பரம், "திராவிட மாடல் என்ன என்பதற்கு அறிஞர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.. தமிழகத்தில் அவர்களுடைய அரசாங்கம் அவர்களுடைய செயல்பாட்டை வரவேற்கிறேன். ஆனால் இந்திய அளவிற்கு அவர்கள் ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். சொந்த கட்சி, மற்றும் கூட்டணியை இப்படி மட்டம் தட்டி பேசிவிட்டாரே என்று கார்த்திக் சிதம்பரத்தின் மீது அதிருப்திகள் சிலசமயம் வெடித்தாலும், எப்போதுமே யாருக்காகவும் பயந்தது கிடையாது, மனதில் உள்ளதை பட்டென துணிச்சலுடன் பேசிவிடக்கூடியவர் கார்த்தி சிதம்பரம் என்ற ஆதரவுக் கருத்துக்களும் எழுந்து வருவதை மறுக்க முடியாது..!!
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications