டீச்சருக்கு கிளாஸ்ரூமிலேயே மசாஜ் செய்த மாணவன்.. காலை ஆட்டிக் கொண்டே..ஒருகையில் பாட்டில் வேற.. கொடுமை
மசாஜ் செய்ய சொன்ன டீச்சரை பற்றி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது
கான்பூர்: டீச்சர் ஒருவர் கிளாஸ் ரூமில் செய்த அட்டகாசம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி, பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு, பீகாரில் ஒரு சம்பவம் நடந்தது.. அது தொடர்பான வீடியோவும் வெளியானது.. அந்த டீச்சர் பெயர் பபிதா குமாரி.. கிளாஸ் ரூமில் பட்டப்பகலில், மாணவர்கள் உட்கார்ந்திருந்தபோதே, சேரை இழுத்து ஜன்னல் ஓரமாக போட்டுக் கொண்டு படுத்துவிட்டார்..
காலை தூக்கி எதிரே இருந்த டேபிள் மீது வைத்துகொண்டு, சேரில் சாய்ந்து தூங்க ஆரம்பித்துவிட்டார்.. ஒருவேளை, ஜன்னல் ஓரம் படுத்தும், தனக்கு காற்று வராமல்போய், எங்கே தூக்கம் கலைந்து விடுமோ என்று நினைத்து, தூங்குவதற்கு முன்பேயே, தன் வகுப்பில் உள்ள மாணவியை கூப்பிட்டு, தனக்கு விசிறி விட சொல்லிவிட்டு படுத்துள்ளார்.
மேலும், அந்த மாணவிக்கு விசிறியை கையோடு எடுத்து தந்துள்ளார்.. அந்த மாணவியும் விசிறிவிட, டீச்சரும் நன்றாக குறட்டை விட்டு தூங்க, பல மாணவிகள், தரையில் உட்கார்ந்து இதை வேடிக்கை பார்க்க.. அந்த கிளாஸ் பிள்ளைகளே சிலர், இதை வீடியோ எடுத்ததுகூட தெரியாமல் டீச்சர் தூங்கி கொண்டிருந்தார்.. அதற்கு பிறகு வீடியோ வெளியாகி, விளக்கம் கேட்கப்பட்டது. பிள்ளைகளுக்கு பாடம் நடத்தாமல் இப்படி தூங்கினால் எப்படி? என்று பபிதா குமாரியிடம் கேட்டனர்.. அதற்கு அவர், "எனக்கு உடம்பு சரியில்லை.. அதனால்தான் தூங்கிட்டேன்" என்று கூலாக பதில் சொன்னார்.. இதன்பிறகு இந்த டீச்சர் விவகாரம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

ஊர்மிளா டீச்சர்
இப்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. உத்தரபிரதேசத்தில் ஹர்தோய் மாவட்டத்தில் நடந்துள்ளது.. போகரி ஆரம்பப் பள்ளி ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது.. இந்த ஸ்கூலில் வேலை பார்க்கும் டீச்சரின் பெயர் ஊர்மிளா சிங்.. கிளாஸ்ரூமில் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தாமல், தனக்கு மசாஜ் செய்யுமாறு ஒரு மாணவனை மிரட்டியுள்ளார்... மாணவனும் டீச்சருக்கு பயந்து, கையில் மசாஜ் செய்துள்ளார்.

கிளாஸ் ரூமிலேயே..
இதுகுறித்த வீடியோ வெளியாகி உள்ளது.. இந்த வீடியோவை எடுத்ததும் அதே வகுப்பறை மாணவர்கள்தான்.. வீடியோவில், டீச்சர் சேரை போட்டு கிளாஸ் ரூமிலேயே ஒரு ஓரமாக உட்கார்ந்துள்ளார்.. தலையில் கொண்டை போட்டுக் கொண்டார்.. ஒரு கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொண்டு, காலை ஆட்டிக் கொண்டே, மசாஜ் செய்யும் சிறுவனை பார்த்து மிரட்டுகிறார்.. அது துவக்க பள்ளி என்பதால், மாணவ - மாணவிகள், மழலை தனம் மாறாமல் இங்குமங்கும் நடமாடுகிறார்கள்.. டீச்சருக்கு கையை மசாஜ் செய்யும் சிறுவனோ, பயந்து பயந்து கையை அழுத்தி விடுகிறான்.. டீச்சர் ஏதோ அந்த சிறுவனிடம் பேசிக் கொண்டே, தண்ணீர் குடிக்கிறார்..

வேடிக்கை பார்க்கும் மாணவர்கள்
ஊர்மிளா டீச்சருக்கு, சிறுவன் மசாஜ் செய்து கொண்டு இருக்கும்போது மற்ற மாணவர்கள் கிளாஸில் இருந்து வெளியே செல்கின்றனர்... சிலர் அங்கேயே நின்று அவருக்கு மசாஜ் செய்வதையும் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த சம்பவம் கடந்த 27ம் தேதி நடந்துள்ள நிலையில், வீடியோ இப்போதுதான் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. இப்போது ஊர்மிளா டீச்சரை அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துவிட்டார்களாம்..

சஸ்பெண்ட்
இது குறித்து ஹர்தோய் அடிப்படை கல்வி அதிகாரி பிபி சிங் சொல்லும்போது, "இந்த வீடியோவை நாங்கள் சோஷியல் மீடியாவில்தான் பார்த்தோம்.. அப்போதுதான் எங்களுக்கே விஷயம் தெரியந்தது.. அவர் தவறு செய்துள்ளது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.. அதனால், அவரது இடைநீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன" என்றார்.. ஆனால், டீச்சர் மீது முறையான புகார் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்...

மசாஜ்
அதுமட்டுமல்ல, ஊர்மிளா டீச்சர் பற்றி அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் புலம்பி தள்ளுகிறார்கள்.. இப்படித்தான் பலமுறை இவர்மீது புகார்கள் வந்துள்ளதாம்.. பிள்ளைகள் பெற்றோரிடம் வந்து சொன்னால், பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று அந்த புகார்களை தெரிவிப்பார்களாம்.. ஆனால், டீச்சர் மீது ஒருமுறை கூட பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது கிடையாதாம்.. இப்போது இந்த மசாஜ் வீடியோ வெளியாகி, அனைவருக்கும் தெரிந்துவிட்டதால், வேறு வழியில்லாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள்..
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications