என்னது டோணி ஓய்வு பெறுகிறாரா?.. இது நம்ம ஆளு இல்லைங்க வேற டோணி!
டோணி என்ற பெயர் கொண்ட போலீஸ் நாய் ஒன்றுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது.
Recommended Video

டெல்லி: கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகின் பேசு பொருளாக இருப்பது டோணி மட்டும் தான். அவர் எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றுதான் பலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். தற்போது டோணி மொஹாலியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி உண்மையா என்று பலரும் கேட்டுக்கொண்டு இருந்த நிலையில் அதுகுறித்து தற்போது தெளிவான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

டோணி ஓய்வு பெற வேண்டும்
தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் வீரர் டோணி மட்டும்தான். அவர் சரியாக ஆடினாலும் ஆடவில்லை என்றாலும் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். அவர் கண்டிப்பாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக வேண்டும் என்று கூறிவருகின்றனர். மேலும் விவிஎஸ் லக்ஷ்மன், அகர்கர், சேவாக் என பலர் டோணி குறித்து நிறைய கருத்து தெரிவித்தனர்.

அறிவிப்பு வெளியானது
இந்த நிலையில் கண்டிப்பாக டோணி 2020ல் நடக்கும் டி-20 உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று சிலர் வெளிப்படையாக கூறினார். இதையடுத்து நேற்று டோணி தன்னுடைய ஓய்வு குறித்து அறிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது. அதன்படி அவர் இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடக்க இருக்கும் 2வது ஒருநாள் போட்டியில் கடைசியாக இடம்பெறுவர் என்று கூறினார்கள். இந்த செய்தி இணையம் முழுக்க வைரல் ஆனது.

வேற டோணி
தற்போது இந்த செய்தி உண்மைதானா என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மும்பை போலீசுக்கு சொந்தமான பாதுகாப்பு நாய் ஒன்று தனது பணியில் இருந்து டிசம்பர் 13ம் தேதி ஓய்வு பெறுகிறது. கடைசியாக அந்த நாய் அதே நாளில் நடக்கும் மொஹாலி கிரிக்கெட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். அந்த நாய்க்கு மும்பை போலீஸ் டோணி என பெயர் வைத்து இருக்கிறார்கள். இதன்காரணமாகவே டோணி ஓய்வு பெற போவதாக செய்தி தீயாக பரவி இருக்கிறது.
|
நிம்மதியான ரசிகர்கள்
தற்போது டோணியின் ஓய்வு செய்தி பொய் என தெரிந்ததும் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இவர் ''முதலில் நீங்கள்தான் ஓய்வு பெற்றுவிட்டீர்கள் என்று நினைத்தேன். நல்லவேளை அது காவல் நாய்'' என்று கூறி லவ் யூ டோணி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications