Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த சொல்வதா? மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தானுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் டோக்ரா முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர். இந்த கருத்துக்காக மெகபூபா முப்தியை கைது செய்ய வேண்டும் என்றும் டோக்ரா முன்னணியினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வு காண தோகாவில் தலிபான் இயக்கத்தின் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவும் பங்கேற்றுள்ளது.

Dogra Front stages protest against Mehbooba Mufti in Jammu

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வரும் போது ஏன் காஷ்மீர் பிரச்சனைக்காக எங்களுடனும் பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? என கேள்வி எழுப்பி இருந்தார்.

Dogra Front stages protest against Mehbooba Mufti in Jammu

மெகபூபா முப்தியின் இந்த கருத்துக்கு டோக்ரா முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பே இல்லை; ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு அங்கம்; ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானையும் ஒரு அங்கமாக சேர்க்க வலியுறுத்தும் மெகபூபாவை கைது செய்ய வேண்டும் என்று டோக்ரா முன்னணி வலியுறுத்தி இருந்தது.

அத்துடன் இன்று ஜம்முவில் மெகபூபா முப்தி வீட்டு முன்பாக டோக்ரா முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மெகபூபா முப்தி நேற்றே டெல்லி சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+