ஆண் துணையின்றி பெண்கள் தனியாக திருப்பதிக்கு வரவேண்டாம் - தேவஸ்தானம் எச்சரிக்கை
திருமலை: வெளியாட்களை நம்பி திருப்பதிக்கு பெண்கள் தனியாக வரவேண்டாம் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, "திருப்பதி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது. தேவஸ்தான உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை இரவும், பகலும் கஷ்டப்பட்டு உழைத்தனர்.

இதன் பயனாக பக்தர்கள் எந்தவித சிரமும் இன்று வாகன சேவை மற்றும் மூலவரை தரிசித்தனர். பக்தர்களுக்கு தரிசனம், அன்னதானம், தங்கும் இடம், குடிநீர், போக்குவரத்து, லட்டு பிரசாதம் விநியோகம் என அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டன. இந்த அனுபவத்தின் மூலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை மேலும் சிறப்பாக நடத்துவோம்.
பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளன்று காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பெண்கள், ஆண் துணையின்றி திருமலைக்கு வந்தனர். அவர்கள் முன்பின் தெரியாத ஒருவரை நம்பி அவர் கொடுத்த டீயை குடித்துள்ளனர்.
பின்னர் அவர் எடுத்து கொடுத்த அறையில் இருந்த அவர்களின் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு போயின. எனவே ஆண் துணையின்றி பெண்கள் தனியாக திருமலைக்கு வந்து வெளி ஆட்களை நம்பி ஏமாற வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications