ஹிந்தி தெரியாது.. கன்னடம், ஆங்கிலத்தில் பேசுங்கள்.. முரளிதரராவை பணிய வைத்த சித்தராமையா

கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பாஜக கட்சியை சேர்ந்த முரளிதரராவிடம் ''என்னால் ஹிந்தி புரிந்து கொள்ள முடியாது. கன்னடம் இல்லை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.'' என்று, முரளிதரராவின் ஹிந்தி டிவிட்டிற்கு பதில் அளி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பாஜக கட்சியை சேர்ந்த முரளிதரராவிடம் ''என்னால் ஹிந்தி புரிந்து கொள்ள முடியாது. கன்னடம் இல்லை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.'' என்று, முரளிதரராவின் ஹிந்தி டிவிட்டிற்கு பதில் அளித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

சித்தராமையா ஒரு தொகுதியில் இருந்து தற்போது இரண்டு தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. இதை கிண்டல் செய்யும் விதமாக பாஜகவை சேர்ந்த முரளிதரராவ் ஹிந்தியில் டிவிட் செய்து இருந்தார்.

முரளிதரராவ் கேள்வி

முரளிதரராவ் ஹிந்தியில் எழுதியிருக்கும் டிவிட்டில் ''அதிக ஆய்விற்கு பின் நீங்கள் சாமுண்டேஸ்வரி தொகுதியை போட்டியிட தேர்வு செய்தீர்கள். ஆனால் அங்கு தோற்றுவிடுவோம் என்று தெரிந்த உடன் இரண்டாவது இடத்தை தேர்வு செய்துள்ளீர்கள். உங்கள் சந்தேகத்தை நான் தீர்க்கிறேன். இரண்டு தொகுதி மட்டுமல்ல, மொத்த கர்நாடகாவும் காங்கிரஸ் இல்லாத மாநிலமாகும்'' என்று சித்தராமையாவை பார்த்து பேசியுள்ளார்.

நெத்தியடி

இதற்கு பதிலளித்த சித்தராமையா ''ஐயா. கன்னடம் இல்லை ஆங்கிலத்தில் எழுதுங்கள். ஹிந்தி புரிந்து கொள்ள முடியாது'' என்று அவரை கிண்டல் செய்யும் விதத்தில், கன்னடத்திலேயே பதில் அளித்துள்ளார்.

பதில் அளித்தார்

இதையடுத்து முரளிதரராவ் கடைசியாக சித்தராமையா வழிக்கு வந்தார். ஹிந்தியில் அவர் எழுதி இருந்ததை போலவே, காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை உருவாக்குவோம் என்று, கன்னடத்தில் எழுதி, சித்தராமையாவிற்கு பதில் அளித்தார்.

விடமாட்டேன்

இதற்கு பதில் அளித்த சித்தராமையா ''என்னுடைய விதியை இரண்டு தொகுதியிலும் இருக்கும் மக்கள் முடிவு செய்வார்கள். நீங்கள் அதை பற்றி கவலைபட வேண்டாம். ஆனால் உங்களுக்கு கன்னடத்தில் டிவிட் செய்ய கற்றுக்கொடுத்த வரை சந்தோசம்தான் எனக்கு'' மீண்டும் நெத்தியடி பதில் ஒன்றை அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+