காங்., எம்.பிகளின் மோடி எதிர்ப்பு கோஷத்தை சென்சார் செய்த சோனியா! மாற்றத்திற்கு காரணம் என்ன?
டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களின் போது பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட வேண்டாம் என கட்சி எம்.பி.,க்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். சோனியாவின் திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம் என இரு கட்சியினருமே குழம்பியுள்ளனர்.
மக்களவையில் நேற்று டெல்லி கிரிக்கெட் வாரிய ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்ப்போது கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்ததால் பிரதமர் மோடி அவைக்கு வந்தார். அவரை பார்த்த எதிர்க்கட்சியினர் ஜேட்லி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மோடியின் பெயரை குறிப்பிட்டு கோஷமிட்டனர்.
இதை கவனித்த சோனியா காந்தி, கோஷமிட்டுக்கொண்டிருந்த, மேற்குவங்கத்தை சேர்ந்த தனது கட்சி எம்.பி., அதிர் ரஞ்சன் சவுத்ரியையும் அவரது குழுவினரையும் அழைத்து, கோஷமிடும் போது மோடியின் பெயரை குறிப்பிட வேண்டாம் என உத்தரவிட்டார். இதனால் உடனடியாக மோடிக்கு எதிரான முழக்கம் நிறுத்தப்பட்டது. கேள்வி நேரம் முடிந்ததும் பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்று விட்டார்.
அரசுக்கு எதிராக எம்.பி.,க்கள் முழக்கமிட்ட போது சோனியா தலையிட்டது ஏன் என்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. பாஜக மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியினருக்கும்கூட, இந்த நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications