கற்பூர வாசனையை விடுங்க.. கழுதைக்கு தெரியுமா 'ஜோதிட' வாசனை!
கழுதை ஒன்று அனைவருக்கும் ஜோதிடம் சொல்லி வருகிறது.
கல்புர்கி, கர்நாடகா: உங்களுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை இருக்கா? இருந்தாலும் சரி, இல்லேன்னாலும் சரி இதை படிச்சே ஆகணும். காரணம் ஒரு கழுதை ஜோசியம் சொல்லுதாம். வேற எங்க. நம்ம நாட்டுலதான். வெளிநாட்டுல இந்த பேச்செல்லாம் எடுபடுமா என்ன?
கர்நாடக மாநிலத்தில்தான் அந்த அதிசய கழுதை உள்ளது. அந்த கழுதையின் பெயர் பன்னாலால். கழுதையின் 'ஓனர்' பெயர் கலீல் அகமது கான். இவர், பொதுஇடத்தில், ஒரு பெரிய தடுப்பு மாதிரி வளையம் போட்டுக்கிட்டு, அதுக்குள்ள தன் கழுதையை தன்னுடன் நிற்க வைத்து கொள்கிறார். அந்த வளையத்தை தாண்டி பொதுமக்கள், அதாவது குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என எல்லோரும் நிற்கிறார்கள்.

இப்ப கழுதைகிட்ட ஓனர் கேட்கிறார், இதோ இந்த வளையத்துக்கு வெளியே நிக்கிறாங்களே... அவங்கள்ல யார் டாக்டரா வரப்போறாங்க? யார் என்ஜினியரா வரப்போறாங்க? யார் வக்கீலா வரப்போறாங்க? என்று இப்படி பல கேள்விகளை கேட்கிறார். உடனே அந்த கழுதை அங்கிருக்கும் குறிப்பிட்ட ஒருவரை நெருங்கி தன் காதால் சுட்டிக் காட்டிவிட்டு மீண்டும் தன் ஓனரிடம் வந்து நின்று கொள்கிறது.
இதுக்கு டிக்கெட் 20 ரூபாயாம். கழுதை சொல்வதை நம்புகிறார்களோ, இல்லையோ, ஆனால் ஓனர் சொல்லி இந்த கழுதை செய்வதை எல்லோரும் ரசிக்கிறார்கள் - சிரித்து மகிழ்கிறார்கள். ஆனால் விலங்கை இப்படி தொந்தரவு செய்வதாக கூறி ஒரு க்ரூப் ஓனருக்கு எதிராக கிளம்பிவிட்டார்கள்! எப்படியோ... கழுதைக்கு கற்பூரம் வாசனை தெரியாட்டியும், ஜோதிடமாவது தெரிஞ்சிருக்கே!
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications