75 வயது ரூல்ஸ் மோடிக்கு பொருந்துமா? நிருபரின் கேள்வியால் முகம் மாறிய அமித்ஷா.. பரபரப்பு பதில்
கொல்கத்தா: ‛‛பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் வழிக்காட்டும் தலைவர்களாக மாற்றப்படுகிறார்கள். இந்த ரூல்ஸ் இப்போது உள்ள பெரிய தலைவர்களுக்கு பொருந்துமா?'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். பிரதமர் மோடிக்கு 75 வயது ஆகும் நிலையில் அவருக்கு ஓய்வு வழங்கப்படுமா? என்பதை மனதில் வைத்து இந்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அமித்ஷா ஒற்றை வரியில் கொடுத்த பதில் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். 2011, 2016, 2021 என 3 சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து வென்று மம்தா பானர்ஜி முதல்வராக தொடர்ந்து வருகிறது.

தமிழகத்தை போல் இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் கட்சியை வீழ்த்தி அரியணை ஏற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. இதனை பிரதமர் மோடியே வெளிப்படையாக அறிவித்தார். பாஜகவின் அடுத்த இலக்கு மேற்கு வங்கம் தான் என்று பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி இருந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிர பணிகளை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலம் சென்றார். அதன்பிறகு கொல்கத்தாவில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மம்தா பானர்ஜியின் அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமித்ஷா கூறியதாவது:
‛‛நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும். 3ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை கைப்பற்றும். மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்தவுடன் ஊடுருவல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 15 ஆண்டுகளாக ஊழல், பயம் உள்ளிட்டவற்றின் அடையாளமாக மேற்கு வங்க மாநிலம் உள்ளது. ஊடுருவல்கள் அதிகரித்துள்ளது. எல்லை பகுதியில் வேலி அமைக்க மேற்கு வங்க அரசு நிலம் கொடுக்க மறுத்து வருகிறது.
ஊடுருவல்காரர்கள் தான் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கியாக உள்ளனர். மம்தா பானர்ஜி அரசில் ஊழல் உச்சத்தை தொட்டுள்ளது. அவரது ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2021ம் ஆண்டில் இருந்து 300 பாஜகவினர் கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இன்னும் சில மாதங்கள் மட்டுமே மம்தா பானஜர்ஜி முதல்வராக இருப்பார். அதன்பிறகு அந்த பதவியில் இருந்து இறங்க வேண்டிய நிலை வரும். 2026 ஏப்ரல் 15ம் தேதி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். இழந்த மேற்கு வங்கத்தின் பெருமைகளை நாங்கள் மீட்டெடுப்போம்'' என்றார்.
அதன்பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் ஒருவர், ‛‛பாஜகவில் 75 வயது நிரம்பியவர்கள் வழிக்காட்டுதல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த ரூல்ஸ் இப்போது உள்ள பெரிய தலைவர்களுக்கு பொருந்துமா? என்ற கேள்வியை எழுப்பினார். பாஜகவில் 75 வயதை கடந்ததாக கூறி எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட பல தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டனர்.
தற்போது பிரதமர் மோடிக்கு 75 வயது ஆகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி 75 வயதை அடைந்தார். இதனால் பிரதமர் மோடிக்கு ஓய்வு வழங்கப்படுமா? என்பதை மனதில் வைத்து அந்த பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.
இதனால் அமித்ஷாவின் முகம் மாறியது. கோபப்படுவது போல் அவர் முகபாவனை இருந்தது. இருப்பினும், அவர் ‛‛எங்களின் கட்சியை பற்றி கவலை கொள்ள வேண்டாம். மேற்கு வங்கத்தை பற்றி கவலைப்படுங்கள்'' என்று சிரித்தபடி கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
4வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி தான்.. பாஜகவால் தொடக்கூட முடியாது.. CNN - News 18 கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications