அப்பா, என்னால முடியல, தற்கொலை செய்யப் போகிறேன்: தந்தைக்கு போன் செய்த டாக்டர் ப்ரியா
டெல்லி: ஓரினச்சேர்க்கையாளர் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக டாக்டர் ப்ரியா வேதி தனது தந்தைக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். அவர் பதறியடித்து வருவதற்குள் ப்ரியா இறந்துவிட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் ராம் பாபு வர்மா(55). டெய்லரான அவர் தனது மகள் ப்ரியாவை டாக்டராக்கியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த ப்ரியாவுக்கு டாக்டர் மாப்பிள்ளையாக தேடியுள்ளார் வர்மா. 3 டாக்டர் மாப்பிள்ளைகளை நிராகரித்த வர்மா டாக்டர் கமல் வேதியை தேர்வு செய்து தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.
திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து ப்ரியா ஓரினச்சேர்க்கையாளரான கமலின் கொடுமை தாங்க முடியாமல் கை நரம்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

போன்
ப்ரியா கணவருடன் தகராறு ஏற்றப்பட்டதையடுத்து டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். அவர் தற்கொலை செய்யும் முன்பு தனது தந்தைக்கு தான் கடைசியாக போன் செய்து பேசியுள்ளார்.

தற்கொலை
அப்பா என்னால் கமலின் கொடுமைகளை தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து வர்மா பதறியடித்து ஜெய்பூரில் இருந்து டெல்லி கிளம்பி வந்தார்.

ப்ரியா
தனது மகளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று அனைத்து கடவுள்களையும் வேண்டிக் கொண்டே டெல்லி வந்தார் வர்மா. ஆனால் அவர் டெல்லி வந்து சேரும் முன்பு ப்ரியா தற்கொலை செய்து கொண்டார்.

உடல்
டெல்லி வந்த அவரிடம் அவர் பார்த்து பார்த்து வளர்த்த அன்பு மகளின் பிரேதத்தை போலீசார் ஒப்படைத்தனர். ப்ரியாவுக்கு திருமணம் முடிந்த 2 ஆண்டுகள் கழித்தே அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதே அவரது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

துணிச்சல்
ப்ரியா டாக்டர் படிக்க விரும்பியபோது எங்கள் ஊரில் உள்ள அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நான் அவரது ஆசையை நிறைவேற்றினேன். நான் என் சொந்த காலில் நிற்க வேண்டும் என்றார் அனுமதித்தேன். திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லாதபோதும் அது குறித்து அவர் குறை கூறியதே இல்லை. ஆனால் என் மகள் தற்கொலை செய்வார் என்று நான் நினைக்கவில்லை என்கிறார் வர்மா.

சகோதரர்கள்
வர்மா தான் ஒரு டெய்லராக இருக்கின்றபோதிலும் தனது மூத்த மகன் விஜய், மகள் ப்ரியாவை டாக்டராக்கியுள்ளார். இளைய மகன் வங்கியில் பணிபுரிகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications