பெங்களூரு வன்முறை.. உண்மையான குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகளை பிடிக்கிறதா போலீஸ் ?
பெங்களூரு: பெங்களூரில் வன்முறையில் ஈடுபட்டதாக அப்பாவி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலார்களை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை 12 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

பெங்களுரூ, மைசூரு உள்ளிட்ட முக்கிய நகரில் உள்ள தமிழர்கள் கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன. தொடர்ந்து அங்கு தமிழர்கள் சொத்துக்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 350க்கும் மேற்பட்டோரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் உண்மையான குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவி டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலார்களையும் போலீசார் கைது செய்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து பாத்திமா என்ற பெண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், எனது கணவர் கட்டிட தொழிலாளராக வேலை செய்து வருகிறது. வன்முறையில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஆனால் அவருக்கும் அந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனக் கூறினார்.
அதேபோல், மீனா, பார்த்திபன் தம்பதியினர் பெங்களூரில் வசித்து வருகின்றனர். அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மீனாவின் கணவர் பார்த்திபனை வன்முறையில் ஈடுபட்டதாக கூறி போலீசார் கைது செய்து அழைத்து சென்றாக கூறுகிறார். மேலும் தனது கணவர் அப்பாவி என்றும் இந்த பிரச்சனைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புல் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications