எங்கடா என் சரக்கை காணோம்... மதுக்கடையை சூறையாடிய குடிகார போலீஸ்காரர்!
குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், குடித்து விட்டு நல்ல போதையில் வந்த ஒரு போலீஸ்காரர், ஒரு மதுக் கடைக்குள் புகுந்து தனக்குப் பிடித்த சரக்கு இல்லை என்று கூறி கலாட்டாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குவாலியரில் இந்த சம்பவம் நடந்தது. அங்குள்ள சந்திரவத்னி என்ற இடத்தில் உள்ள ஒரு மதுக் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார் ஒரு போலீஸ்காரர். அழரது பெயர் அசோக் டோமர். ஏற்கனவே நல்ல போதையில் இருந்த அவர் மதுக் கடைக்குள் சென்று தனக்குப் பிடித்த மதுவின் பெயரைக் கேட்டுள்ளார். ஆனால் அப்போது அது ஸ்டாக் இல்லையாம்.

இதனால் கோபமடைந்த டோமர், கடையில் இருந்த மது பாட்டில்களைத் தூக்கி் போட்டு உடைத்தார். எனக்குப் பிடித்ததை வாங்கி வைக்க முடியாதா என்று கேட்டு கலாட்டாவில் குதித்தார். இதனால் கடையில் கூட்டம் கூடி விட்டது. பலரும் கூட குடிகார போலீஸ்காரர் செய்த கலாட்டாவை வேடிக்கை பார்த்தார்.
அவரது கோபத்தில் சிக்கி பல பாட்டில்கள் உடைந்தன. கூட்டம் கூடியதைத் தொடர்ந்தும், சில பத்திரிகையாளர்கள் வந்ததைத் தொடர்ந்தும் டோமர் அங்கிருந்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு போய் விட்டார்.
இந்த சம்பவம் குவாலியரில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications