Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியை நிறுத்தச் சொல்லி சண்டை போட்ட அம்மா... பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது

குடியை நிறுத்தச் சொல்லி சண்டை போட்ட அம்மாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளான் ஒரு குடிகாரன். காசியாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

காசியாபாத்: குடியை நிறுத்தச் சொன்ன அம்மாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து செய்திருக்கிறான் குடிகாரன். காசியாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடிபோதையில் அம்மாவை கொன்ற கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெற்ற அம்மா என்றும் பார்க்காமல் கொலை செய்ய குடிகாரனின் பெயர் மோகன்லால் என்பதாகும். காஜியாபாத்தில் உள்ள கோடா பகுதியின் சங்கம் பார்க் காலனியில் உள்ள யாதவ் சவ்க் அருகே மோகன் லால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தில் அவரது மனைவி, ஐந்து குழந்தைகள், அவரது சகோதரர் மற்றும் அவரது தாயார் உள்ளனர்.

Drunk Ghaziabad man pours petrol on mother sets her on fire

தினசரியும் குடிப்பதும் மனைவி குழந்தைகளை போட்டு அடிப்பதும்தான் அவனது வேலை. மோகனின் அம்மாவோ மகன் குடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தினமும் திட்டி சண்டை போடுவார். கடந்த சில தினங்களாகவே மோகனின் அம்மா ஜூல்சி பகவான் தேவிக்கு மகனின் குடியை நிறுத்த வேண்டும் என்று சில தினங்களாகவே கடுமையாக திட்டினார். அன்றும் அதே போல குடிபோதையில் இருந்த மோகனுக்கு அம்மா கூறியது காதிலேயே கேட்கவில்லை. போதையில் போய் படுத்துக்கொண்டான்.

கடந்த புதன் கிழமையன்று இரவு 7.30 மணியளவில் எப்போதும் போல் முட்ட முட்ட குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். மோகனை அந்த நிலைமையில் பார்த்த அவனின் அம்மா மோகனை கடுமையாக திட்டினார். அப்போது மோகனும் திட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சண்டை முற்றியது. குடிபோதையில் இருந்த மோகன் தன் அம்மாவின் மேல் பொட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார்.

பகவான் தேவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிக்சைக்காக அனுமதித்தனர். உடனடியாக போலீசிற்கும் தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் தகவலறிந்த போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து குடிகாரன் மோகன்லாலை கைது செய்தனர். பெற்ற தாய் என்றும் பாராமல் குடிபோதையில் எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+