சிங்கத்தின் குகையில் வாலண்டியராக ஏறிய போதை ஆசாமி: பத்திரமாக மீட்ட ஊழியர்கள்
சிங்கத்தின் குகையில் தானாக வந்து குதித்த போதை ஆசாமியை பூங்கா ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்
Recommended Video

திருவனந்தபுரம்: குடிபோதையில் சிங்கத்தின் கூண்டில் குதித்த இளைஞரை ஊழியர்கள் அலெக்காக தூக்கிய சம்பவம் திருவனந்தபுரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மிருகசாட்சி சாலையில் சிங்கம் வெளி கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றி பெரிய அளவிலான சுவரும், அதற்கு மேல் இரும்பு கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூண்டில் இரண்டு வயதான சிங்கம் அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கூண்டின் அருகே மாலை 6 மணி அளவில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் நின்றிருந்தார். திடீரென அவர் கம்பி வேலியில் ஏறி கூண்டுக்குள் குதித்து விட்டார்.
இந்த குட்டி சிங்கம் அமைதியானது என்பதால் அது வாலிபரை ஓன்றும் செய்யவில்லை. ஆனால் வாலிபர் ஊர்ந்து சென்று சிங்கத்தை சீண்ட துவங்கினார். இதை விரும்பாத சிங்கம் கர்ஜிக்க துவங்கியது. இந்த சப்தம் கேட்ட சுற்றுலா பயணிகள் பயத்தில் உறைந்தனர்.
தகவலறிந்த மிருக காட்சி சாலை ஊழியர்கள் விரைந்து வந்து சிங்கத்தின் கவனத்தை திசை திருப்பி கூண்டை அடைத்தனர். பின்னர் அந்த வாலிபரை குண்டு கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.
அவரை மியூசியம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒத்தபாலம் பகுதியை சேர்ந்த முருகன் என்பதும் குடிபோதையில் இருப்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications