மணிப்பூரை தொடர்ந்து.. திரிபுராவிலும் வன்முறை! இன்டெர்நெட் இணைப்பு துண்டிப்பு.. 144 தடை - பரபரப்பு
அகர்தலா: திரிபுராவில் ஏற்பட்ட திடீர் வன்முறை காரணமாக இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பதற்றம் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள கந்தசெரா கிராமத்தில் சமீபத்தில் கண்காட்சி ஒன்று நடந்திருக்கிறது. இதில் உள்ளூர் குழுக்கள் இரண்டுக்கு இடையில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. இந்த சண்டையில் பரமேஸ்வர் ரியாங் எனும் இளைஞன் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அனைத்தும் கடந்த 7ம் தேதி நடந்திருக்கிறது. உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றிய போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இளைஞரின் உறவினர்கள், கொலைக்கு நீதி கேட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்திருக்கிறது. இந்த வன்முறையில் ஏராளமான கடைகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பலர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து தலாய் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "கலவரத்தை மேலும் பரவ செய்ய சோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சோஷியல் மீடியா மூலம் பரவிய சில தகவல்கள் மக்களை தூண்டி விட்டிருக்கிறது. இப்படியே சென்றால் சட்டம் ஒழுங்கு மோசமடையும் என்பதை உணர்ந்த நாங்கள், உடனடியாக இன்டெர்நெட் இணைப்பை துண்டித்திருக்கிறோம். மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார்.
இது குறித்து தலாய் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "கலவரத்தை மேலும் பரவ செய்ய சோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சோஷியல் மீடியா மூலம் பரவிய சில தவல்கள் மக்களை தூண்டி விட்டிருக்கிறது. இப்படியே சென்றால் சட்டம் ஒழுங்கு மோசமடையும் என்பதை உணர்ந்த நாங்கள், உடனடியாக இன்டெர்நெட் இணைப்பை துண்டித்திருக்கிறோம். மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார்.
திரிபுரா வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். சமீப காலமாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக மணிப்பூர் கலவரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது வரை பிரதமர் அங்கு செல்லவில்லை என்று காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. ரஷ்யா செல்ல பிரதமருக்கு நேரம் இருக்கிறது, ஆனால் மணிப்பூர் போக நேரமில்லையா என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில், திரிபுராவில் வன்முறை சம்பவம் காரணமாக இன்டெர்நெட் துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications