கறுப்பு பிலிம் ஒட்டிய காருடன் காவல்துறை அலுவலகம் வந்த கன்னட நடிகர் விஜய்க்கு அபராதம்!
பெங்களூரு: கன்னட முன்னணி நடிகரான 'துனியா' விஜய் தனது காரில் கறுப்பு வண்ண சூரிய தடுப்பு பிலிம்களை ஒட்டியிருந்ததற்காக, பெங்களூரு போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர். அந்த பிலிம்களையும் அகற்றினர்.
கன்னட நடிகரான விஜய், துனியா என்ற படத்தின் மூலம் புகழடைந்தார். எனவே துனியா விஜய் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருகிறார். இந்நிலையில் திரைப்பட வினியோகஸ்தர் ஜெயண்ணா என்பவர், விஜய் தன்னை மிரட்டியதாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த, மைசூரு சாலையிலுள்ள சிசிபி போலீஸ் கிளை அலுவலகத்திற்கு துனியா விஜய் வரவழைக்கப்பட்டார். விஜய் தனது ஆடம்பர ரேஞ்ச் ரோவர் காரில் போலீஸ் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

அப்போது, சிசிபி போலீஸ் அலுவலகத்தில் பணியில் இருந்த டிராபிக் போலீஸ்காரர்கள், விஜய் காரின் கண்ணாடிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கறுப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தனர். காருக்குள் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும் அளவுக்கு கறுப்பு பிலிம்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டுமே தவிர அதைவிட அடர்த்தியாக ஒட்டப்பட கூடாது என்பது உச்சநீதிமன்ற உத்தரவு என்பதால், விஜய்க்கு ரூ.100 அபராதம் விதித்துள்ளனர் போலீசார்.
அதுமட்டுமின்றி காரில் இருந்த கறுப்பு பிலிம்களையும் போலீசார் அகற்றியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications