அசாமில் ஆட்சியை பிடித்தது பாஜக கூட்டணி! வடகிழக்கில் முதல் முறையாக பாஜக முத்திரை
கவுகாத்தி: அசாமில் 126 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது. மதியத்திற்குள் அக்கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றதாக டிரெண்டுகள் வர ஆரம்பித்தன.
அசாமில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய மக்கள் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. அதேபோல பாஜக, அசோம் கண பரிஷத், போடோ மக்கள் ஃபிரன்ட் ஆகிய கட்சிகள் இணைந்து களம் கண்டன.
அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக ஃப்ரன்ட், ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக களம் கண்டன. மொத்தம் 525 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

இதனிடையே வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கெல்லாம் தொடங்கியது. பாஜக கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. போகப்போக இந்த இடைவெளி அதிகரித்தது.
காலை 11 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 70 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 26 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. மூன்றாவது அணி, 16 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பிறர் 8 தொகுதிகளில் முன்னிலை வகித்தனர்.
மாலை 6 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 66 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, 17 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 6 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.
மூன்றாவது அணியினர் 9 தொகுதிகளை கைப்பற்றி 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர். பிறர் 1 தொகுதியில் வெற்றியும், 2 தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்தனர்.
வெற்றி பெற்றுவிட்ட நிலையில், பாஜக சார்பில் சரபானந்தா சோனோவால் முதல்வராக பதவியேற்க உள்ளார். வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக கால் பதிப்பது இதுதான் முதல்முறை என்பதால் அக்கட்சி தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 15 வருடங்கள் தொடந்து ஆட்சியில் இருந்த காங்கிரசை, பாஜக இம்முறை அகற்றியுள்ளது.
எக்ஸிட் போல், கருத்துக்கணிப்பில், அசாமில் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications