வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம்.. 7 பேர் சாவு, நூற்றுக்கணக்கானோர் காயம்
கொல்கத்தா: வடகிழக்கு மாநிலங்களில் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கம் காரணமாக இன்று அதிகாலையில் அம்மாநில மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்திய-மியான்மர் எல்லையை மையம் கொண்டு, இன்று அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அசாம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் குலுங்கின.
குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் பாதிப்பு கடுமையாக இருந்துள்ளது. முதல்கட்ட தகவல்படி அந்த நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மேற்கு வங்கத்திலும் நிலநடுக்க பாதிப்பு உணரப்படதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மேற்பார்வையிட உத்தரவிட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திரமோடி டிவிட் செய்துள்ளார்.
மேலும், அசாம் முதல்வர் தருண் கோகாய், அருணாச்சல் பிரதேச முதல்வர் நபம் துகி போன்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிலைமை குறித்து கேட்டறிந்ததாகவும், பிரதமர் தனது டிவிட்டுகளில் கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications