அதிகாலையிலேயே அதிர்ந்தது ஜம்மு காஷ்மீர்.. நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடுகள்.. மக்கள் அச்சம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று காலையில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4.6 மற்றும் 4.8 ஆக நிலநடுக்கங்கள் பதிவாகின. வீடுகளில் இருந்த பொருட்கள் நிலநடுக்கத்தினால் அதிர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. ஜம்மு காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பூமிக்கடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். அதிகாலை 6.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலையில் தூங்கி கொண்டு இருந்த மக்கள் பலரும் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் திடுக்கிட்டு விழித்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதியில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
நாட்டையே உலுக்கிய சம்பவம்.. கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் நிலநடுக்கம் காலை 6.45 மணியளவில் ஏற்பட்ட நிலையில், அடுத்த 7 நிமிடங்களில் அதாவது 6.52 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் எற்படது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. வீடுகளில் இருந்த பொருட்கள் நிலநடுக்கத்தினால் அதிர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications