டெல்லி, காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்
டெல்லி: டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 12.41 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.41 மணி வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
இது ரிக்டர் அளவில் 3.1 என இருந்தது. எனவே சேதம் இல்லை. இதற்கிடையே இன்று அதிகாலை மீண்டும் டெல்லியிலும் காஷ்மீரிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.
காஷ்மீர் மாநிலம் லடாக் மாவட்டம் லே நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது. நிலநடுக்கம் அதிர்வுகள் டெல்லியிலும் லேசாக உணரப்பட்டது. இது 4.0 ரிக்டர் அளவில் இருந்தது.
அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மீண்டும் மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. நிலநடுக்க அனுபவங்களை ட்விட்டர் இணையதளம் மூலம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications