எபோலா பாதிப்புடன் டெல்லி விமான நிலையம் வந்த நபர்களுக்கு தீவிர கண்காணிப்பு
டெல்லி: கானா நாட்டில் இருந்து விமானம் மூலமாக டெல்லி வந்த 3 விமான பயணிகளிடம் எபோலோ வைரஸ் பரவலுக்கான அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் தீவிர பரிசோதனையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் உயிர்க்கொல்லி நோயான எபோலோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவக்கூடியது. எனவே ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் ஏர்போர்ட்டில் கடுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர், கானாவில் இருந்து ஜூலை 21ம்தேதி டெல்லிக்கு விமானத்தில் வந்ததாகவும், அவர்கள் மூவருமே தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால், அவரும், அவரது குடும்பத்தாரும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் பெயர் விவரத்தை சுகாதாரத்துறையினர் வெளியிடமறுத்துவிட்டனர். இவர்கள் மூவருமே துவாரகா பகுதியிலுள்ள தங்களது சொந்த வீட்டில்தான் உள்ளனர். இருப்பினும் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விமானத்தில் வந்த சக பயணிகளிடமும் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களுக்கு எந்த விதமான அறிகுறியும் தென்படவில்லை என்பதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே எபோலா பாதிப்புக்குள்ளாகியவர்கள் இந்தியாவுக்குள் வந்துவிட கூடாது என்ற நோக்கத்தில் நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர மருத்து பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக மேற்கு கடற்கரை நகரங்களின் விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைகள் நடந்து வருகின்றன. மங்களூர், மும்பை, கேரளாவிலுள்ள விமான நிலையங்களில் மருத்துவ குழு இரவு பகலாக பயணிகளிடம் பரிசோதனை நடத்தி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications