நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்று முடிவு: டெல்லியில் தேர்தல் ஆணையம் கூட்டம்
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் தேதி அட்டவணையை இறுதி செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர்.
லோக்சபாவுக்கு ஏப்ரல் - மே மாதங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடவடிக்கைகளை மே மாதம் 15-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு தேவையான 90 சதவீத ஏற்பாடுகளை ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையம் செய்து முடித்து விட்டது. அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்ததோடு மின்னணு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், மாநிலம் வாரியாக சென்று அந்தந்த மாநிலங்களில் ஏப்ரல், மே மாதம் வரும் உள்ளூர் பண்டிகை தினங்களையும், தட்பவெப்ப நிலையையும் ஆய்வு செய்தனர். அதோடு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டர்கள், டி.ஜி.பி.க்கள் ஆகியோரிடமும் தேர்தல் அதிகாரிகள் முக்கிய ஆலோசனைகளை நடத்தி முடித்தனர்.
அவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எப்போது, எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்ற தேர்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் தேதி அட்டவணையை இறுதி செய்வதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் தலைமை தாங்கினார். அவர் மாநிலம் வாரியாக அதிகாரிகளிடம் எந்தெந்த தேதிகளில் ஓட்டுப்பதிவை நடத்தலாம் என்று கருத்து கேட்டார்.
தமிழ்நாட்டில் இருந்து தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, டி.ஜி.பி. ராமானுஜம், தேர்தல் பிரிவு ஐ.ஜி. சேஷாயி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதிகாரிகளுக்கான பயிற்சி, ஓட்டுச்சாவடி இடங்கள், பதற்றமான தொகுதிகள், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் பேசப்பட்டது. இவற்றின் அடிப்படையில் இன்று தேர்தல் தேதி முடிவு செய்யப்படுகிறது.
தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையோடு முடிகிறது. எனவே அதன் பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமிஷன் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் தேர்தல் அட்டவணை தெரிந்து விடும். இதை எதிர் பார்த்து முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் கூட்டணியை விரைவுப் படுத்தி வருகின்றன.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications