பிப். 13-ந் தேதி ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்! பிப். 16-ல் வாக்கு வாக்கு எண்ணிக்கை!!
டெல்லி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 13-ந் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்துள்ளார். இந்த வாக்குகள் பிப்ரவரி 16-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டசபை உறுப்பினர் பதவி பறிபோனது. அவர் மொத்தம் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா வென்ற ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் டெல்லியில் இன்று டெல்லி சட்டசபைக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் இன்று அறிவித்தார். டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 7-ந் தேதி தேர்தல் நடைபெறும். பிப்ரவரி 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேலும் காலியாக இருக்கும் தமிழகத்தின் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் தலைமைத் தேர்தல் ஆணையாளர் வி.எஸ் சம்பத் அறிவித்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் 16-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அட்டவணை விவரம்:
வேட்புமனு தாக்கல் ஜன. 19ந் தேதி தொடக்கம்;
வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஜனவரி 27-ந் தேதி கடைசி நாள்
வேட்புமனு பரிசீலனை நாள் - ஜனவரி 28;
வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - ஜனவரி 30
வாக்குப் பதிவு பிப்ரவரி 13ந் தேதி நடைபெறும்;
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 16-ந் தேதி தேதி நடைபெறும் .
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications