காங். வேட்பாளரை 'வளைத்ததை' அம்லப்படுத்திய 'டேப்'..சத்தீஸ்கரில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி!
ராய்பூர்: சத்தீஸ்கர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை பணம் கொடுத்து ஆளும் பா.ஜ.க. வாங்கியதை அம்பலப்படுத்தும் டேப் ஆதாரம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டுள்ளதால் சத்தீஸ்கரில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரமண்சிங் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கர் மாவட்டத்தில் உள்ள அந்தகார் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மந்துராம் பவார் நிறுத்தப்பட்டார். ஆனால் திடீரென அவர் தாம் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதனால் பா.ஜ.க. வேட்பாளர் மிக எளிதாக வெற்றி பெற்றார்.
ஆளும் பா.ஜ.க. தான் பணம் கொடுத்து மந்துராம் பவாரை விலைக்கு வாங்கப்பட்டதாக அப்போதே தேர்தல் ஆணையத்துக்கு புகாரும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மந்துராம் பவாரை பணம் கொடுத்து வளைப்பது தொடர்பாக ஆடியோ டேப் உரையாடல் நேற்று ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆடியோவில் மந்துராம் பவாருக்கு ரமண்சிங்கின் உறவினர் பணம் கொடுத்து விலைபேசுவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இது சத்தீஸ்கர் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணைய, சத்தீஸ்கர் தேர்தல் ஆணையத்துக்கு உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆளும் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications