சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்: 50% வாக்குச் சாவடிகள் பாதுகாப்பற்றவை
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் 50% வாக்குச் சாவடிகள் பாதுகாப்பற்றவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் விரிந்து கிடக்கிறது. இதனால் இம்மாநிலத்தில் 2 கட்டமாக அதாவது நவம்பர் 11-ந் தேதி மற்றும் 19 -ந் தேதி ஆகிய நாட்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

51 பொதுத் தொகுதிகள்
இந்த 90-ல் 51 பொதுத் தொகுதிகள்... இதில் பழங்குடி இனத்தவருக்கானவை 29. தாழ்த்தப்பட்டோருக்கானது 10 தொகுதிகள்.

வலுவான காங். - பாஜக
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் வலிமையாக உள்ளன.

பாஜகவுக்கு 50
கடந்த 2008ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக போட்டியிடட்டு 50 இடங்களைக் கைப்பற்றியது. வாக்கு சதவீதம் 40.39%

காங்கிரஸுக்கு 38
காங்கிரஸ் கட்சி 87 இடஙங்களில் போட்டியிட்டு 38 இடங்களைக் கைப்பற்றியது.. வாக்கு சதவீதம் 39.88%.

ஆச்சரியப்படுத்திய தேசியவாத காங்.
மகாராஷ்டிராவில் வலுவாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இம்மாநிலத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. ஆனால் அக்கட்சிக்கு 17.34% வாக்குகள் கிடைத்தன.

90 தொகுதியில் போட்டியிட்ட பகுஜன்
பகுஜன் சமாஜ் இம்மாநிலத்திலும் 90 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 2 இடங்களை மட்டும் கைப்பற்றியது. 83 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.

மாவோயிஸ்டுகள் மண்ணில் கோட்டைவிடும் இடதுகள்
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இடதுசாரிகள் போனியாகவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அதுவும் 18 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது. இதே கதிதான் மார்க்சிஸ்ட் கட்சிக்கும். 8 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் டெபாசிட் பறிபோனது.

50% வாக்குச் சாவடிகள் பதற்றமானவை
தற்போதைய தேர்தலிலில் மொத்தம் 21,424 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50% வாக்குச் சாவடிகள் பதற்றமானவை மற்றும் அதிக பதற்றமானவை என்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாக்களித்தால் விரல்கள் துண்டிக்கப்படும் என்று மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications