இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையத்தில் நாளை மீண்டும் விசாரணை
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாளை மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாளை மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந் தேதி நடைபெற்ற விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஓபிஎஸ் அணியினர் போலி பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்திருப்பதாகவும் தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது. அதே நேரத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்போ, அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர் தினகரன்; ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தினகரன். அவரால் அதிமுகவுக்கோ, அதிமுகவின் சின்னத்துக்கோ உரிமை கோர முடியாது என வாதிடப்பட்டது.
ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகினர். தினகரன் சார்பில் மாஜி அமைச்சர் அஸ்வினினிகுமார் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரும் 23-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதனிடையே நாளை விசாரணையின் போது தினகரன் தரப்பு வழக்கறிஞர் அஸ்வினிகுமார் சற்று தாமதமாக ஆஜராக அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் இதை நிராகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாளை மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications