ம.பியில் தாமரை குளங்களை மூடக் கோரிய காங். கோரிக்கை நிராகரிப்பு
Subscribe to Oneindia Tamil

மத்தியப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை மலர் பூத்துக் குலுங்கும் குளங்களையும் பொதுமக்களின் பார்வையில் படாத வகையில் மூட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது.
இதற்கு பதிலடியாக காங்கிரஸின் தேர்தல் சின்னம் கை என்பதால் பொதுமக்கள் கைகளை மறைத்துக் கொள்ள வேண்டுமா என்று பாஜக கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் காங்கிரஸின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. தாமரை குளங்களை மூடுவது நடைமுறை சாத்தியமற்றது என்பது தேர்தல் ஆணையத்தின் கருத்து.












Click it and Unblock the Notifications