அடுத்து சசிகலாவையும் தூக்கியடிக்கும் தேர்தல் ஆணையம்... ஓபிஎஸ் டீம் சுட்டிக்காட்டிய நச் பாயிண்ட்!
ஓபிஎஸ் அணியின் வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை ஏற்ற தேர்தல் ஆணணயம் சசிகலாவின் இடைக்கால பொதுச்செயலர் பதவியையும் பறிக்கும் என்றே தெரிகிறது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை நியமித்ததும் செல்லாது என விரைவில் அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது மற்றும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விவாதம் தொடங்கியது. ஓபிஎஸ் அணி சார்பில் முதலில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதங்களை முன்வைத்தார்.

அதிகாரிகள் கறார்
அவர் தம்முடைய வாதத்தின் தொடக்கத்தில் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என்பது பற்றி பேசத் தொடங்கினார். ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளோ அது தொடர்பாக இருதரப்பும் பதில் அளித்துள்ளனர்; அதை நாங்கள் பரிசீலிக்கிறோம். இப்போது இரட்டை இலை தொடர்பாக மட்டும் வாதங்களை முன்வையுங்கள் என கறாராக கூறினர்.

குற்றவாளி சசிகலா
ஆனாலும் அசராத ஓபிஎஸ் அணி வழக்கறிஞர் வைத்தியாநதன் அடுத்து வைத்த வாதத்தால் தேர்தல் ஆணையம் ஜெர்க்காகிப் போனது. அதாவது உச்சநீதிமன்றத்தால் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி சசிகலா. அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றவாளி வேட்பாளரை பரிந்துரைப்பதா?
தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலா, தேர்தலில் போட்டியிட முடியாது; வாக்காளர் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறாது. இப்படிப்பட்ட ஒரு குற்றவாளி ஒரு வேட்பாளரை பரிந்துரைப்பதும் அந்த வேட்பாளருக்கு சின்னத்தை ஒதுக்குவதும் அதை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது என்பதும் ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தையே கேள்விக்குறியாக்கக் கூடியது என வாதங்களை முன்வைத்தார்.

மவுனமான தேர்தல் ஆணையம்
இந்த வாதத்துக்கு பதிலளிக்க முடியாமல் தேர்தல் ஆணையம் மவுனமாக இருந்தது. இந்த வாதத்தையே அதிமுக பெயர், கொடி, சின்னம் முடக்கம் தொடர்பான அறிக்கையிலும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த வாதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டால் சசிகலா, அதிமுக பொதுச்செயலராகவே தொடர முடியாது என்பது மட்டும் உறுதி என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications