கமல் கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருக்கா... 31-க்குள்ள சொல்லுங்க... தேர்தல் ஆணையம்
கமல்ஹாசன் கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 31-ஆம் தேதிக்குள் சொல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை கட்சியாக பதிவு செய்ய யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் வரும் 31-ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த பல மாதங்களாக அரசியலுக்கு வரப்போவதாகவும் தமிழக அரசை குறை கூறியும் இருந்த கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அக்கட்சிக்கு இணைந்த கைகள் கொண்ட சின்னத்தையும் கொடியையும் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய கடந்த மார்ச் மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. அதுகுறித்து விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றது.
மேலும் கமல் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் அவர்கள் மே 31-ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தொடர்பாக செய்தித்தாள்களில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications