தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது... விஷாலுக்கு கை விரித்தது தேர்தல் ஆணையம்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு தொடர்பாக தேர்தல் அதிகாரி எடுத்த முடிவே இறுதியானது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
Recommended Video

டெல்லி : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அதிகாரி எடுத்த முடிவு இறுதியானது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த திங்கள்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
அதேபோல் விஷாலும், ஜெ.தீபாவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து வேட்புமனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது தீபாவின் வேட்புமனுவில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யவில்லை என்பதால் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.

ஏற்றுக் கொண்டு பின்னர் நிராகரிப்பு
விஷாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று காலை முதலே திமுகவும் அதிமுகவும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் விஷாலின் வேட்புமனுவை இறுதியில் ஆய்வு செய்தார் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி. அப்போது முன்மொழிந்தவர்கள் 2 பேர் வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து அல்ல என்று கூறியதால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு ஏற்பு
இதையடுத்து விஷால் தண்டையார்பேட்டை தேர்தல் அலுவலகம் முன்பு சாலையில் தர்ணா போராட்டம் நடத்தினார். மேலும் முன்மொழிந்தவர்களை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாகவும் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். பின்னர் போலீஸார் சமாதானப்படுத்தி தேர்தல் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்த கூறினர். இதையடுத்து தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் தான் போட்டியிடுவதற்கான காரணங்களை கூறி தனது வேட்புமனுவை ஏற்குமாறு
விஷால் வேண்டுகோள் விடுத்தார். இதனால் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதாக அதிகாரி அறிவித்தார். ஆனால் விஷால் வீடு திரும்பிய சில மணி நேரத்தில் வேட்புமனு மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமரிடம் முறையீடு
இதனால் அதிர்ச்சியடைந்த விஷால் தனக்கு தெரியாமல் வேட்புமனுவை நிராகரித்துவிட்டதாக கூறி நடந்தவற்றை ஜனாதிபதி ராம் கோவிந்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் டுவிட்டரில் புகாராக அனுப்பினார். மேலும் தனது வேட்புமனு மீண்டும் பரிசீலனை செய்ய கூறி இந்திய தேர்தல் ஆணையத்திலும் விஷால் மனு தாக்கல் செய்தார்.

முடிவு சரியானது
இந்நிலையில் விஷாலின் மனு மீது தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது. அதில் தேர்தல் அதிகாரி எடுத்த முடிவே இறுதியானது. விஷாலின் மனுவை பரிசீலனை செய்வது குறித்து தேர்தல் அதிகாரியிடமே அவர் முறையிடலாம் என்று பதில் அளித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications