தமிழக சட்டசபைத் தேர்தல்.. தேதி இன்னும் முடிவாகவில்லை.. தேர்தல் ஆணையம்
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் தேதியை அது முடிவு செய்யவில்லை.
தமிழக சட்டசபையின் ஆயுள் காலம் வருகிற மே 22ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆயுள் முடிய சரியாக இன்னும் 4 மாதங்கள் உள்ளன. இந்த நிலையில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஏற்படுகள் சூடு பிடித்துள்ளன. மாநில அளவிலும், டெல்லி அளவிலும் தேர்தல் ஆணையம் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் ஏற்கனவே தொடங்க விட்டன. நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளது.

5 மாநில தேர்தல்
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மற்ற இரு ஆணையர்களான ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவத், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மற்றும் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு- ஏற்பாடு
இந்தக் கூட்டத்தில் ஐந்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தலை எப்படி அமைதியாக நடத்துவது, நேர்மையாக, சுதந்திரமாக எப்படி நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேதியை முடிவு செய்யவில்லை
கூட்டத்திற்குப் பின்னர் தேர்தல் ஆணையர் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தல் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிற விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம் என்றார்.

வெள்ள நிவாரணப் பணிகளுக்குத் தடை வருமா
தமிழகத்தில் பல மாவட்டங்கள் கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இங்கு வெள்ள நிவாரணப் பணிகள் இன்னும் முடியவில்லை. பலருக்கு வெள்ள நிவரண நிதியும் போய்ச் சேரவில்லை. இந்தநிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இவற்றைத் தொடருவதற்கு விலக்கு அளிக்குமா என்ற கேள்விக்கு அதுகுறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று ராவத் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications