நல்லவேள... சம்பளமே இல்லன்னு சொல்லாம விட்டாரே சக்திகாந்த தாஸ்!!
டெல்லி: மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் சக்தி காந்த தாஸ் பிரஸ் மீட் வைக்கப் போகிறார் என்றாலே, அடுத்து என்னென்ன விசித்திரமான அறிவிப்புகள் வரப்போகின்றனவோ என்று நடுங்க ஆரம்பிக்கிறார்கள் நாட்டு நடப்பைக் கவனித்து வரும் மக்கள்.
பிரதமரின் பண ஒழிப்பு அறிவிப்பு வந்ததிலிருந்து தொடர்ந்து புதுப்புது அறிவிப்புகள், முன்னுக்குப் பின் முரணான நிபந்தனைகள், புதுப்புது கட்டுப்பாடுகள், மை வைப்பது, சீனியர் சிட்டிசன் ஒன்லி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏகத்துக்கும் நோகடித்தவர் இந்த சக்திகாந்த தாஸ்.

முதலில் தினசரி ரூ 4000 வரை செல்லாத பணத்தை மாற்றலாம் என்றவர், அதை சில தினங்களில் ரூ 4500 என உயர்த்தி, அடுத்த நாளே டமாலென ரூ 2000 ஆக்கிவிட்டார். செம கடுப்பானார்கள் மக்கள். அடுத்து வங்கிகளில் கூட்டத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று மக்களின் விரலில் மை வைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, முகத்தில் கரி பூசிய அறிவிப்பையும் வெளியிட்டார்.
அடுத்து திருமணச் செலவுகளுக்கு ரூ 2.5 லட்சத்தை எடுக்க அவர் விதித்த நிபந்தனைகளைக் கேட்டு, 'போய்யா.. நாங்க கல்யாணத்தை தள்ளியே வச்சிக்கிறோம்... இதையெல்லாம் ரெட்டி வீட்டுக் கல்யாணத்துக்கு விதிக்க வேண்டியதுதானே' என கொந்தளித்துப் போனார்கள் சாமானியர்கள்.
கடந்த சனிக்கிழமை வங்கிகளில் சீனியர் சிட்டிசன்கள் மட்டும்தான் பணம் மாற்ற, எடுக்க முடியும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வங்கி வேலை நாள் என இவர் அறிவிக்க, வங்கிப் பணியாளர்கள் சங்கமோ 'அதெல்லாம் முடியாது... லீவு விட்டாச்சு.. திங்கள்கிழமை பார்க்கலாம்' என 'பங்க்' அடித்தனர். ஒன்றும் செய்ய முடியவில்லை.
திங்கள்கிழமை பெரும்பாலான வங்கிகள் சொல்லி வைத்த மாதிரி பணம் இல்லை எனறு கைவிரித்தன. ஏடிஎம்கள் 99 சதவீதம் அவுட். செவ்வாய்க்கிழமையும் இதுதான் நிலைமை.
மக்கள் வெறுத்துப் போய், ஸ்தம்பித்து நிற்கும் சூழலில் இன்று மீண்டும் மீடியாவைச் சந்தித்தார் சக்திகாந்த தாஸ்.
அவர் இன்று வீசிய 'குண்டுகள்' இவை:
இனி அனைத்தும் மின்னணு முறை பணப் பரிவர்த்தனைதான்.
அரசு அலுவலகங்களிலும் மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு உத்தரவு.
அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது.
-இன்னும் இப்படிச் சில அறிவிப்புகளோடு இன்றைய ஷோவை முடித்துள்ளார் சக்திகாந்த தாஸ்.
'சரீ... அந்த சம்பளத்த எடுக்கவாவது வுடுவீங்களா.. அல்லது எடுக்காம பாத்துக்கங்க.. மீறி எடுத்தா ஜெயில்னு சொல்லுவீங்களா ஆபீசர்?' - இது பப்ளிக் மைன்ட் வாய்ஸ்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications