நிலக்கரி ஊழல் வழக்கு.. மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன்.. அமலாக்கத்துறை அதிரடி!
கொல்கத்தா: நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜிக்கும் அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அமலாக்கத்துறை துறை மூலம் எங்களுக்கு நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்க முடியாது என்று அபிஷேக் பானர்ஜி கூறியுளளார்

நிலக்கரி ஊழல் வழக்கு
மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்தது தொடர்பாக பல கோடிஊழல் நடந்தது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. அதில் அனுப் மஜி எனும் லாலா மற்றும் பினாய் மிஸ்ரா ஆகிய இரு முக்கிய சதிகாரர்கள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. அனுப் லாலா இந்த வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ருஜிரா பானர்ஜி என்பவரிடம் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

அபிஷேக் பானர்ஜி
இந்த ருஜிரா பானர்ஜி அபிஷேக் பானர்ஜி என்பவரின் மனைவி ஆவார். அபிஷேக் பானர்ஜியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உறவினர்கள். திரிணாமுல் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராவார். இந்த வழக்கில் கடந்த பிபரவரி மாதம் அதாவது மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் ருஜிரா பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதேபோல் ருஜிராவின் சகோதரி மேனகா காம்பிருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ருஜிரா பானர்ஜி மற்றும் அவரது சகோதரியிடம் சி.பி.ஐ விசாரணையும் நடத்தியது.

அமலாக்கத்துறை சம்மன்
நிலக்கரி கடத்தல் தொடர்பான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் எம்.பி அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா பானர்ஜி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அபிஷேக் பானர்ஜி செப்டம்பர் 6 -ம் தேதி புதுடெல்லியில் உள்ள அமலாக்கத்துறை ஏஜென்சி முன்பு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது மனைவி செப்டம்பர் 1-ம் தேதி அமலாக்கத்துறை ஏஜென்சி முன்பு ஆஜராகும்படி முன் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அழுத்தம் கொடுக்க முடியாது
அபிஷேக் பானர்ஜி வழக்கறிஞர் சஞ்சய் பாசு செப்டம்பர் 3 ஆம் தேதி முகமை முன் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க காவல்துறையின் இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் - ஷ்யாம் சிங் மற்றும் ஞானவந்த் சிங் ஆகியோர் இதே வழக்கில் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை ஏஜென்சி முன்பு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை துறை மூலம் எங்களுக்கு நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்க முடியாது என்று அபிஷேக் பானர்ஜி கூறியுளளார். வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications