முதல்வரானதும் முதல் வேலையாக ஜெயிலுக்குப் போகும் எடப்பாடியார்.. சசிகலாவை சந்திக்க!
முதல்வராக பதவியேற்றதும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டு, அமைச்சரவை பட்டியல் இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையால் வெளியிடப்பட்டது.
முதல்வராக பதவியேற்றதும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

சசிகலாவை சந்திக்க நாளை காலை எடப்பாடி பழனிச்சாமி பெங்களூர் பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று இரவே பெங்களூர் விரைவதாகவும் ஒரு தகவல் உள்ளபோதிலும், சிறையில் பார்வையாளர் நேரம் முடிவடைந்து இரவாகிவிடும் என்பதால் அது பாதுகாப்பானதாக இருக்காது என்று பெங்களூர் காவல்துறை கருதுகிறது. எனவே நாளை காலையிலேயே எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை சந்தித்து, அவரிடம் ஆசி பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications