For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காந்தி கிராம பல்கலைக் கழகத்தை மத்திய பல்கலை.யாக தரம் உயர்த்த வேண்டும்: முதல்வர் எடப்பாடி

பிரதமர் மோடியிடம் நிறைய கோரிக்கைகளை வைத்தோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏராளமான கோரிக்கைகளை வைத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Edappadi Palanisamy says that We have forwarded our demands to Central Government

இந்த கூட்டத்துக்கு பின்னர் பிரதமர் மோடி கூறுகையில் தமிழகத்தின் சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்தோம். குடிமராமத்து பணிக்கான் நிதி கோரியுள்ளோம்.

ராமநாதபுரம், சிவகங்கையில் மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தை மத்திய பல்கலைக் கழகமாக தரம் உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளோம்.

காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்துக்கு ரூ500 கோடி ஒதுக்கீடு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை.

விவசாயிகள் வளம் பெற நவீன விற்பனைக் கூடம் அமைக்க கூடுதல் நிதி தேவைப்படுகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினேன். தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் எடப்பாடி.

English summary
Edappadi Palanisamy says that we have forwarded our demands to Central Government. I didnt meet PM Modi personally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X